150
155
160
165
170
175
180
|
மன்னுயிர் நீங்க மழைவளங் கரந்து
பொன்னெயிற் காஞ்சி நகர்கவி னழிய
ஆங்கது கேட்டே ஆருயிர் மருந்தாய்
ஈங்கிம் முதியா ளிடவயின் வைத்த
தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்
தையல்நின் பயந்தோர் தம்மோடு போகி
அறவணன் தானும் ஆங்குள னாதலின்
செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை
அறவண னருளால் ஆய்தொடி ஆவ்வூர்ப்
பிறவண மொழிந்துநின் பெற்றியை யாகி
வறனோ டுலகின் மழைவளந் தரூஉம்
அறனோ டேந்தி ஆருயி ரோம்புவை
ஆய்தொடிக் கவ்வூர் அறனொடு தோன்றும்
ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள
பிறவற முரைத்தோர் பெற்றிமை யெல்லாம்
அறவணன் றனைக்குநீ யுரைத்த அந்நாள்
தவமுந் தருமமும் சார்பிற் றோற்றமும்
பவமுறு மார்க்கமும் பான்மையி னுரைத்து
மறவிரு ளிரிய மன்னுயி ரேமுற
அறவெயில் விரித்தாங் களப்பி லிருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றுங் காறும்
செத்தும் பிறந்துஞ் செம்பொருள் காவா
இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும்
தாயரும் நீயுந் தவறின் றாக
வாய்வ தாகநின் மனப்பாட் டறமென
ஆங்கவ னுரைத்துலும் அவன்மொழி பிழையாய்
பாங்கியல் நல்லறம் பலவுஞ் செய்தபின்
கச்சிமுற் றத்து நின்னுயிர் கடைகொள
உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம்
ஆண்பிறப் பாகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கங் களைந்து
பிறர்கறம் அருளும் பெரியோன் றனக்குத்
தலைச்சா வகனாய்ச் சார்பறுத் துய்தி
இன்னும் கேட்டியோ நன்னுனதல் மடந்தை
|