27--35. செல்லல்
செல்லல் சேயரி நெடுங்கண் - செவ்வரி படர்ந்த நெடிய கண்களையுடையாய் செல்லாதே
செல்லாதே, அல்லியந் தாரோன் தன்பால் செல்லல் - அகவிதழ் பொருந்திய
மலர்மாலை யினையுடைய மன்னன் மகனிடம் செல்லாதே, நினக்கு இவன் மகனாத்
தோன்றியதூஉம்-இவ்வுதயகுமரன் நினக்குக் கணவனாக விருந்ததுவும், மனக்கினாயாற்கு
நீ மகளாயதூஉம்-மனத்திற்கினிய இவ்விளங்கோவிற்கு நீ மனைவியாக விருந்துவும்,
பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால்-முன்னும் பின்னும் பல பிறப்புகளில் உண்டு,
கண்ட பிறவியே அல்ல காரிகை-மணிமேகலை நீ அறிந்துகொண்ட முற்பிறப்பில்
மட்டுமல்ல, தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்- துன்பத்தில் அழுந்துதற்கேதுவாகிய
தடுமாறும் பிறவியாகிய தோற்றத்தை, விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்ளேல்
- நீக்குமாறு முயல்கின்ற நீ துன்பங் கொள்ளாதே, என்றிவை சொல்லி இருந்தெய்வம்
உரைத்துலும்-என்று இவைகளைக் கூறி அப்பெருந் தெய்வம் விளக்குதலும் ;
செல்லல்:
ஏவன்முற்று; அடுக்கு விரைவு பற்றியது. சேயரி நெடுங்கண்: விளி. மகனா - கணவனாக:
1"நோதக வுண்டோ நும்மகனார்க்கு"
என்புழியும் கணவனை மகனார் என்று கூறி யிருத்தல் காண்க கண்ட பிறவியே அல்ல
பல் பிறப்புக்களிலும் உளவென்க. கண்ட - அறிந்துகொண்ட. பிறவியே-பிறவியில்
மட்டுமே. தடுமாறுதல் நாற்கதியுள் ஒன்றொன்றில் மாறியும், ஆண் பெண் மாறியும்
பிறத்தலும், நரகொடு துறக்கம் நானிலத்திற்சென்று சுழலுதலுமாம். சொல்லி உரைத்தலும்
- கூறி விளக்குதலுமென்க.
36--46.
பொன்திகழ் மேனிப் பூங்கோடி பொருந்திய-பொன்போல் விளங்குகின்ற திருமேனியையுடைய
மணிமேகலை ஆண்டுத் தங்கி, பொய்யா நாவொடு இப்பொதியிலில் பொருந்திய-இவ்வம்பலத்தின்
கண் பொய்யாத நாவுடன் அமர்ந்திருக்கின்ற, தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்-தெய்வமோ
நீ நின் திருவடிகளை வணங்கினேன், விட்ட பிறப்பின் வெய்துயிர்த்து ஈங்கிவன்
திட்டிவிடம் உணச் செல்லுயிர் போயதும்-முற்பிறப்பில் இவனது உயிரானது திட்டிவிடத்தாலுண்ணப்பட்டு
வெவ்வுயிர்ப் பெறிந்து சென்றதும், நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூர யான் விஞ்சையன்
வாளின் இவன் விளிந்ததூஉம் - இப்பிறப்பில் யான் உளம் நடுங்கிப் பெருந்துயர்
கூருமாறு இவன் விஞ்சையனுடைய வாளினாலே இறந்ததும் ஆகிய தீவினைகளை, அறிதலும்
அறிதியோ அறிந்தனையாயின் - அறியலும் செய்தியோ அங்ஙனம் அறிந்திருப்பையானால்,
பெறுவேன் தில்ல நின் பேரருள் ஈங்கென-நினது போருளை இவ்விடத்துப் பெறுவேன்
என்று கூற, ஐஅரி நெடுங்கண் ஆயிழை கேள்
1
சிலப். 16: 17.
|