என - அழகிய அரி படர்ந்த பெரிய கண்களையுடைய ஆயிழாய் கேட்பாயாக என்று,
தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்-தெய்வ மொழியாலே கந்திற் பாவை உரைக்கும்
;
பொருந்தி
- செல்லுத லொழிந்து நின்று. செல்லுயிர்-நில்லாது திரியுமியல்புடைய உயிர்.
போயதும்-போனமைக்குக் காரணமாகிய தீவினையையும். விளிந்ததூஉம் - விளிந்ததற்குக்
காரணமாகிய தீவினையையும். அறிதலும் அறிதியோ - அறிதலுஞ் செய்தியோ ; இஃது
1"உண்ணலு முண்ணேன் வாழலும்
வாழேன்" என்பன போல நின்றது. தில்ல: விழைவுப் பொருட்டு. நல்லவென்பதும்
பாடம். நின் பேரருள் பெறுவேன் என்றது நீ கூறும் விடையைக் கேட்பேன் என்றபடி.
தெய்வக் கிளவி - வான் மொழி. தெய்வக் கிளவியிற் றெய்வம் எனக் கொண்டு
முக்காலமும் அறிந்துரைக்கும் மொழியினையுடைய தெய்வம் என்றுரைத்தலுமாம் ;
47--52. காயங்கரை எனும் பேரியாற்று அடைகரை - காயங்கரை என்னும்
பேராற்றின் அடைகரையில், மாயமில் மாதவன் வரு பொருள் உரைத்து-வஞ்சமில்
பெருந்தவனாகிய புத்தன் அவதரித்தலைக் கூறி, மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம்
- மயக்கமுற்ற மக்களுடைய மனவழுக்கை நீக்கும், பிரமதருமனைப் பேணினி ராகி-பிரம
தருமன் என்னும் முனிவனை வழிபட்டு, அடிசிற்சிறப்புயாம் அடிகளுக்கு ஆக்குதல் விடியல்
வேலை வேண்டினம் என்றலும்-யாங்கள் நாள்வெயிற் காலையில் அடிகட்கு அமுதூட்டும்
சிறப்புச் செய்தலை வேண்டுகின்றாம் என்றுரைத்து அம்முனிவன் அதற்கிசையலும்
நீவிர், மாலை நீங்க மனமகிழ்வு எய்தி - உளத்தில் உவகை யடைந்து இரவு கழிய
இருந்து ;
மாயம்-மயங்கிய
வறிவுமாம். வருபொருள்-தோன்றுதலாகிய செய்தியை; உலகிலே தீவினை மிகுதோறும்
அதனைப் போக்கி அருளறத்தை நிலைநிறுத்தி உயிர்களை நிருவாண மடைவித்தற் பொருட்டுப்
புத்ததேவன் தோன்றுவனென்பது பௌத்த நூற்றுணிபு ; இஃது "ஈரெண் ணூற்றோ டீரெட்
டாண்டிற், பேரறி வாளன் றோன்றும்" (12 : 77-8) என்பது முதலாக இந்நூலுட் பலவிடத்தும்
வருதல் காண்க. மருள் - காமவெகுளி மயக்கங்கள் என்றலும், நீக்க, தோன்ற என்பவற்றின்
பின் வேண்டுஞ் சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. வேண்டினம் என்றலும்-வேண்டினமென்று
மடையனை நோக்கிக் கூறுதலும் என்றுரைத்தலுமாம் ; இப்பொருட்கு, மாலை நீங்கக்
காலை தோன்ற வரூஉ வீழ்ந்த மடையனை என்றியைத்துரைக்க. மாலை-இரவு.
54--62.
காலை தோன்ற வேலையின் வரூஉ நடைத்திறந்து இழுக்கி நல்லடி தளர்ந்து
- வைகறைப் பொழுது தோன்ற அப்பொழுது தான் வந்து நடைவகையால் வழுக்கி அடிதளர்ந்து,
மடைக்கலம்
1
கலி. 23,
|