50
55
60
65
70 |
பூக்கொடி
வல்லியுங் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும்பொற் றூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின் புதுமணற் பரப்புமின்
கதலிகைக் கொடியுங் காழூன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண்மணற் பந்தருந் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்
ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின்
பற்றா மாக்கள் தம்முட னாயினும்
செற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின்
வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியுங் தாழ்பூந் துறைகளும்
தேவரு மக்களும் ஒத்துடன் றிரிதரு
நாலேழ் நாளினும் நன்கறிந் தீரென
ஒளிறுவாள் மறவருந் தேரும் மாவும்
களிறுஞ் சூழ்தரக் கண்முர சியம்பிப்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வகியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென். |
உரை
1--10. உலகம் திரியா
ஓங்குயர் விழுச்சீர் - நன்மக்களது ஒழுக்கம் வேறுபடாத மிக உயர்ந்த சீரிய
புகழையுடைய, பலர்புகழ்மூதூர்ப் பண்பு மேம்படீஇய - பல நாட்டினராலும் புகழ்ந்துரைக்கப்படும்
பழமை சான்ற புகார்நகரத்தின் தன்மை மேம்படும் பொருட்டு, ஓங்குயர் மலயத்து
அருந்தவன் உரைப்ப - மிக மேம்பட்ட பொதியின் மலையில் உள்ள அரிய தவத்தையுடைய
அகத்திய முனிவர் உரைத்தருள, தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
-
|