பக்கம் எண் :

பக்கம் எண் :4

Manimegalai-Book Content
1. விழாவறை காதை
 
வானத்தில் அசைகின்ற மதில்களை அழித்த வீரவளையணிந்த
தோள்களை யுடைமையின் தூங்செயி லெறிந்த தொடித்தோட்
செம்பியன் எனப் பெயர்பெற்ற சோழ மன்னவன், விண்ணவர்
தலைவனை வணங்கி முன்நின்று - வானவர்க் கரசனாகிய இந்தி
ரனை வணங்கி நின்று, மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள்
- நிலவுலகின்கண் என்னுடைய சிறந்த நகரத்தில், மேலோர்
விழைய விழாக்கோள் எடுத்த - மேலோரும் விழையுமாறு
விழாவெடுத்தலை மேற்கொண்ட, நாலேழ் நாளினும் நன்கு
இனிது உறைக என - இருபத்தெட்டு நாளினும் ஆண்டு வந்து
இனிதே தங்க வேண்டும் என வேண்ட, அமரர் தலைவன்
ஆங்கது நேர்ந்தது - வானவர் தலைவன் அதற்கு உடன்
பட்டதனை, கவராக் கேள்வியோர் கடவார்ஆகலின் - தெளிந்த
நூற்கேள்வியினை யுடையார் பிழையார் ஆதலினால் ;

ஓங்குயர் இரண்டும் ஒரு பொருட் பன்மொழிகள். மேம்படீஇய -மேம்படுத்துவதற்கு என்றுமாம். தூங்கெயில் - அசைகின்ற மதில் ; தேவர்க்குப் பகைவராகிய அவுணருடைய மதில். செம்பியன் - சோழருள் ஒருவன். இவன் எயிலழித்த செய்தி, 1 "ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயி லெயிந்தநின், னூங்கணோர்." 2 ;"தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை" என்பன முதலியவற்றானும் அறியப்படும். வான்பதி - சிறந்தபதி. மேலோர் - தேவர் முதலாயினோர். நேர்ந்தது : வினைப்பெயர். கவரா - ஐயுறாத, தெளிந்த. அருந்தவன் உரைப்ப, செம்பியன் வணங்கி நின்று உறைகவென, அமரர் தலைவன் நேர்ந்தது என்க.

11--18. மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் இத் திறம் -
மெய்ப் பொருளுணர்த்துகின்ற நூல்வகை, உலகியல், நல்ல
தத்துவப் பொருள், முத்தி என்னும் இவ்வகைகளை, தத்தம்
இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கரும் - அவரவர் இயற்
கைக்கேற்ப உணர்த்துகின்ற சமய வாதியரும், தம் துறைபோகிய
அமயக் கணக்கரும் - தம்முடைய நெறியிற் கைதேர்ந்த கால
ங்களை எண்ணிக் கூறும் சோதிடரும், அகலாராகி - இந் நகரை
விட்டு நீங்காதவராய், கரந்து உரு எய்திய கடவுளாளரும்-தமது
பேரொளியினை மறைத்து மக்கள் கண்களாற் காணுமளவான
வடிவினையாக்கிக் கொண்ட தேவரும், பரந்து ஒருங்கு ஈண்டிய
பாடை மாக்களும் - பலவிடத்து நின்றும் போந்து ஒருங்குகூடிய
மொழி வேறுபட்ட மக்களும், ஐம்பெருங் குழுவும்
எண்பேராயமும் - அரசர்க்குரிய அமைச்சராதி ஐந்து பெருங்
குழுவினரும் கரணத்தியலவராதி எண்பெருங் கூட்டத்தினரும்,
வந்து ஒருங்கு குழீஇ - வந்து ஒன்றாகக் கூடி ;


1 புறம். 39. 2 சிலப். 29. அம்மானைவரி.