கட்டப்பட்ட கட்டினையுடைய முழவுடன்கூடிய விழாக்காண்டலை விரும்பி, கடவுள் பேணல்
கடலியை ஆகலின் - வேறு கடவுளை வணங்கும் கடப்பாடுடைய ஆயினையாகலின், மடவரல்
ஏவ மழையும் பெய்யாது - நங்காய் நீ ஏவினாள் மழையும் பெய்யாது, நிறையுடைப்
பெண்டிர் தம்மே போல - நிறையுடைய மகளிரைப் போல, பிறர் நெஞ்சு சுடூஉம்
பெற்றியும் இல்லை - பிறருடைய உள்ளத்தைச் சுடுகின்ற தன்மையுடையையும் அல்லை,
ஆங்கவை ஒழிகுவை ஆயின் - முற்கூறிய நின் செயல்களை நீங்குவாயானால், ஆயிழை
ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது - நங்காய் உயர்ந்த வானத்து மழையும்
நீ ''பெய்'' என மொழியிற் பெய்யா நிற்கும் ;
"தெய்வந்
தொழாஅள...தேறாய்" என்றது இந்நூலாசிரியர் கருத்துத் தெய்வத்தின் கூற்றில்
வைத்துணர்த்தப்பட்டது. சாத்தனார் இக் குறளை 1உரையளவையாகக்
கொண்டு, வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று கூறியது தெய்வப் புலவர்பால் அவருக்குள்ள
பெருமதிப்பை இனிது புலப்படுத்தும். பொருளுரை - முனிவர் புரிந்து கண்ட பொருளுடன்
கூடியவுரை ; மெய்யுரையுமாம்; பொருள் - மெய்ம்மையாதலைப் ''பொருள்சேர் புகழ்''
என்பதனாலறிக. பிசி - பொய்ம்மொழியும் நகைமொழியுமாவது; இது பிதிர் எனவும்,
விடுகதையெனவும் வழங்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் 2;"நொடியொடு
புணர்த்த பிசியி னான" என நொடியைப் பிசிக்கு அடையாகவே கூறி யுள்ளார். ஈண்டு
நொடி என்பதற்கு வறுமொழி என்று கூறுதல் சாலும். மடவரல் : முன்னிலைப் பெயர்.
70--9. பெட்டாங்கு
ஒழுகும் பெண்டிரைப் போல - விரும்பிய வண்ணம் ஒழுகும் பெண்டிரைக் கட்டுவதுபோல,
கட்டாது உன்னை என் கடுந் தொழிற்பாசம் - எனது கொடிய தொழிலையுடைய பாச மானது
நின்னைப் பிணியாது, மன்முறை எழுநாள்வைத்து-அரசன் முறை செய்தற்குக் காலவளவாக
ஏழுநாள் நிறுத்தி, அவன் வழுஉம் பின் முறை அல்லது - அந்நாட்களுள் அவன் முறை
செய்யாது தவறிய பின்பல்லது, என்முறை இல்லை - யான் முறை செய்யுமாறில்லை,
ஈங்கெழுநாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை - மெல்லியலே
இன்றைக்கு ஏழாம் நாளில் நின்னிடம் வைத்த உள்ளத்தை மீட்காத மயக்கமுடையோனை,
வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு என - ககந்தன் கேள்வியுற்று வாளினால்
ஒறுத்தலும் உண்டு என்று, இகந்த பூதம் எடுத்துரை செய்தது-தீமையைக் கடந்த பூதம்
எடுத்துக் கூறியது, அப்பூதம் உரைத்த நாளால் ஆங்கவன் தாதைவாளால் தடியவும் பட்டனன்-
1
கு
றள் : 55.
2 தொல்,
செய், 165.
|