அப்பூதங் கூறிய நாளிலேயே அவன் தன் தந்தையின் வாளால் வெட்டப்பட்டனன்
;
நீ
அங்ஙனம் விழாக் காண்டல் முதலியன செய்து போந்தாயாயினும் கற்பு நெறி கடந்து
அவமைறந் தொழுகும் அலவற்பெண்டிர் போலாகாயாகலின் என் பாசம் உன்னைக் கட்டாதென்றும்,
நின்பால் உள்ளத்தைச் செல்ல விடுத்துப் பிறர்மனை நயத்தலாகிய குற்ற மிழைத்தோனைப்
புடைத்துண்டல் வழுவன்றாயினும் ஏழுநாளளவில் அரசன் முறை செய்யா தொழியினே அங்ஙனம்
செய்யலாகுமென்றும் பூதங் கூறிற்றென்க. முறை செய்தல் - குற்றஞ் செய்தாரை அதற்குத்தக
ஒறுத்தல்; 1"முறையெனப் படுவது
கண்ணோடா துயிர்வவ்வல்" என்றார் பிறசான்றோரும். பின்முறை - பின்பு. எழுநாளில்
- ஏழாவது நாளில். மயரி - மயக்கமுடையான். நாளால் - நாளில்.
80--1. இன்னும்
கேளாய் இருங்கடல் உடுத்த மண்ணாள் செல்வத்து மன்னவர் ஏறே-பெரிய கடலை ஆடையாக
வுடைய நிலவுலகினை யாளும் செல்வமுடைய அரசர்களுள் ஏறனையாய் இன்னும் கேட்பாயாக
;
82--8. தருமதத்தனும்
தன் மாமன்மகள் பெருமதர் மழைக்கண் விசாகையும் - தருமதத்தன் என்னும் வணிகனும்
அவன்றன் மாமன் மகளாகிய அழகிய பெரிய கண்களையுடைய விசாகை என்பவளும், பேணி
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக் கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்-தெய்வத்தால்
விரும்பி வியப்புடைத்ததாக எழுதப்பட்ட செய்தொழிலின் எல்லை கடந்த ஓவியம்போலக்
கண்களைக் கவரும் எழிலுடையர், மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனள்
என்றே ஊர்முழுது அலர் எழ- அவருள் தருமதத்தன் மைத்துனன் முறைமையுடையனாதலின்
விசாகை அவனுடன் காந்தருவ மணத்திற்கு இயைந்தனள் என்று ஊரெங்கும் அலருண்டாக
;
தெய்வம் பேணிக் காட்டும் ஓவியம் எனவும்,
கைவினை கடந்த ஒவியம் எனவும் கூட்டுக; 2"ஆதரித்
தமுதிற் கோல்தோய்த் தவயவமமைக்குந் தன்மை, யாதெனத் திகைக்கு மல்லால்
மதனற்கு மெழுத வொண்ணாச், சீதை" என்பது ஈண்டு அறியற்பாலது. தருமதத்தனும் விசாகையும்
வனப்பினர்; அவருள் அவன் மைத்துனன் முறைமையால் அவள் ஒத்தனள் என விரித்துரைக்க.
88--94. புனையா
ஓவியம் புறம்போந்து என்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை-ஒள்ளிய நெற்றியையுடைய
விசாகை இல்லத்தினின்றும் நீங்கி வண்ணங்களைக்கொண்டு எழுதாது வடிவம் மட்டும்
அமைத்த ஓவியப்பாவை வெளிபோந்தாற்போல, உலக வறவியின் ஊடுசென்று ஏறி -
சென்று உலகவறவியின்கண் ஏறி, இலகொளிக்
1
கலி. நெய்தல்: 16. 2
கம்ப. பால. மிதிலைக். 5.
|