பக்கம் எண் :

பக்கம் எண் :317

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை
 

கந்தின் எழுதிய பாவாய் - விளங்கும் ஒளியையுடைய தூணின்கண் எழுதப்பட்ட தெய்வப்பாவையே, உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீ என - இவ்வூரிலுள்ளோர் கூறும் பெரிய பழியை நீ நீக்குவாயாக என்று வேண்ட, மாநகர் உள்ளீர் மழை தரும் இவள் என நாவுடைப்பாவை நங்கையை எடுத்தலும் - நாவுடைய அப் பாவை மாநகரிலுள்ளோர்களே

செயற்கை யழகொன்றும் இன்மையானும், அலரெழுந்த வருத்தத்தால் ஒளி மாழ்கினமையானும் ''புனையாவோவியம்'' போல என்றார். மழைதரும் என்றமையால் கற்பின் சிறப்புக் கூறப்பட்டது. எடுத்தல்- உயர்த்தல் ; உயர்த்துக் கூறுதல். விசாகை ஒழிப்பாய் நீ என, அப்பாவை நங்கையை எடுத்தலு மென்க. இவள் மழையைத்தரும் கற்புடையாள் என்று விசாகையை உயர்த்திக் கூறுதலும்;

95--100. தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின் - இன்னணம் கடவுண்மொழியால்மெய்ம்மை காட்டித்தெளிவிக்கப்பெற்றிலேன் ஆயின், மையல் ஊரோ மனமாசு ஒழியாது - மயக்கங்கொண்ட ஊரவரின் மனவிருள் நீங்காது, மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன்-மறுபிறப்பின்கண் மைத்துனற்கு மனைவியாகுவேன், இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே-இப்பிறப்பில் இவனொடு மணம் பொருந்தேன் என்று, நற்றாய் தனக்கு நற்றிறம் சாற்றி - தன் அன்னைக்கு நல்லியல்புகளை எடுத்துக்கூறி, மற்று அவள் கன்னிமாடத்து அடைந்த பின்-விசாகை கன்னிமாடத்திற் சேர்ந்த பின்னர்;

மனமாசு - திரிபான எண்ணம், மைத்துனன் - அத்தை மகன் - தருமதத்தன். தான் குமரி மூத்தலால் தாய் துன்புறாவண்ணம் அவட்கு நற்றிறம் மொழிந்தாள் என்க. நற்றிறம் - விரதமுமாம்.

101--6. தருமதத்தனும் தந்தையும் தாயரும் - தரும தத்தனும் அவனுடைய தந்தை தாயரும், பெருநகர் தன்னைப் பிறகிட்டேகி - காவிரிபூம்பட்டினத்தைப் பின் வைத்துச் சென்று, தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என - யாங்கள் அழுந்திய துன்பத்தினின்றும் நீக்கியருளினாய் என்று, நாவுடைப்பாவை நலம்பலஏத்தி- கந்திற் பாவையின் சிறப்புகளைப் பலவாறு துதித்து, மிக்கோர் உறையும் விழுப்பெரும் செல்வத்து-மேலோர் வாழ்கின்ற சிறந்த பெருஞ்செல்வத்தினையுடைய, தக்கண மதுரை தான் சென்று அடைந்தபின்-தென்றிசையிலுள்ள கூடற்பதியிற் சென்று சேர்ந்த பின்னர்;

பிறகிட்டேகுதல்-பின்னே யிருக்கும்படி கடந்து செல்லுதல். தலையெடுத்தாய் ; நீக்கினாய் என்னும் பொருட்டு.

107--10. தருமதத்தனும் தன் மாமன் மகள் விரிதரு பூங்குழல் விசா கையை அல்லது - தருமதத்தனும் தன் அம்மான் மகளாகிய