பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து நல்லாள் நாணாள்- பொன்வளையுடைய
விசாகையாகிய நல்லாளும் நாணாது மனையின் புறத்தே வந்து, பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்பாற் சென்று - பலர் நடுவே தீயனவற்றை நீங்கிய அவ்வணிகனிடம்
சென்று ;
இருநில
வேந்து - சோழ மன்னன்: மாதவர் இங்ஙனம் விளித் துரைக்கின்றனர். அவன் பலர்
சூழ இருந்தமையின் பல்லோர் நாப்பண் அவன்பாற் சென்று என்றார். அல்லவை -
பொய் முதலிய தீமைகள்.
127--34.
நம்முள் நாம் அறிந்திலம்-நாம் நம்முள் ஒருவரை யொருவர் அறிகின்றிலம்,
நம்மை முன்னாள் மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன - முன்னாளில் நம்மை
மருளச்செய்த இருவே முடைய அழகும் எங்கே மறைந்தன, ஆறைந்து இரட்டி ஆண்டு ஆயது-உனக்கு
அறுபது யாண்டாயிற்று, என் நாறுஐங் கூந்தலும் நரை விராவுற்றன-நாறுகின்ற என்
ஐம்பாலாகிய கூந்தலும் நரை விரவுதலுற்றன, இளமையும் காமமும் யாங்கொளித்தனவோ
- இளமைப்பருவமும் அப்பருவத்தில் உண்டாம் வேட்கையும் இப் பொழுது எங்கு ஒளித்தனவோ,
உளனில்லாள எனக்கு ஈங்கு உரையாய் - மனத்திட்பம் இல்லாதோய் எனக்கு இப்பொழுது
கூறுவாயாக, இப்பிறப்பாயின் யான் நின் அடி அடையேன் - இப் பிறப்பிலே யான்
நின் அடிகளை அடைவேனல்லேன், அப்பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன்
- மறுப்பிறப்பில் யான் நின் குற்றேவல் கேட்கப் பெறுவேன் ;
பல்யாண்டின் முன் இருந்த தம் வடிவு பெரிதும்
மாறி ஒருவரை யொருவர் கண்டுகொள்ளுதற் கரிதாயினமையின் ''நம்முள் நாம் அறிந்திலம்''
என்றாள். கூந்தலும்: உம்மை எச்சப் பொருட்டு. கூந்தலின் ஐவகையுங் கருதி விராவுற்றன
வெனப் பன்மை கூறினார். மேல் பத்தினியில்லோர் பல அறஞ் செய்யினும் புத்தேளுலகம்
புகார் ஆகலின் விரைவில் நின்னக ரடைகவென அந்தணன் கூறியது கேட்டுப் போந்
தான் என்றலின், தருமதத்தன் விசாகையை மணம்புரியும் கருத்துடன் வந்தானாவன்
; அறுபது யாண்டாகித் தலைநரைத்த பின்னும் மனம் நெகிழ்ந்து மணத்தை விரும்பினமையில்
விசாகை அவனை ''உளனில் லாள'' என விளிப்பாளாயினள். உளன்-ஊக்கம்; மனவுறுதி.
ஆயின் : உரைநடை. கற்புடை மனைவி கணவனை வழிபடுமியல்பினளாகலின். நினக்கு
மனையாகேன், மனைவியாகுவேன் என்பாள் முறையே நின் அடி யடையேன், அடித்தொழில்
கேட்குவன் என்றாள் என்க.
135--42.
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா - இளமையும் நிலை பெறாது உடம்பும் நிலைபெறாது,
வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா-வளமுடைய சிறந்த பொருளும் நிலைபெறாது,
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்-உம்பருலகத்தைப் புதல்வராலும் பெற
|