பக்கம் எண் :

பக்கம் எண் :321

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை
 

155--8. ஏறிய செங்கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு எனக் ககந்தன் கேட்டு-விசாகைக்குச் சூட்டுதற் பொருட்டு மாலை வாங்குவதற்கு ஏறிய கை மீட்டும் இறங்கவில்லை என்பதைக் ககந்தன் கேள்வியுற்று, கடுஞ்சினம் திருகி - கடிய சினம் மிக்கு, மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் - மகன் இறக்கும் துன்பத்தை நோக்காதவனாய் அவனை வாளால் வெட்டினான் ; நோக்கான் : நோக்கல் நோக்கம்.

159--65. ஊழிதோ றூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்று-எம்மரசர் பெருமானே நீ ஊழியூழிதோறும் உலகங்காத்து வாழ்வாயாகவென்று, மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் - அவணிருந்த அருந்தவர்களுள் ஒருவன் உரைத்தலும், வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன் - மாறாக பெருஞ்சிறப்புடைய மன்னவன் அவற்றைக் கேட்டிருந்து, இன்றே அல்ல என்று எடுத்துரைத்து-இன்று மட்டுமல்ல என எடுத்துக்கூறி, நன்றறி மாதவிர் நலம்பல காட்டினிர் - உறுதியை உணர்ந்த மாதவத்தீர் பல நன்னெறியைக் காட்டினீர் - இன்றும் உளதோ இவ்வினை உரைம் என- இந்நாளிலும் இத்தகைய தீவினை உண்டு கொல்லோ உரைத்தருளும் என ;

"இன்றே யல்ல" என்று தொடங்கியதனை இக்காதையின் 19-ஆம் அடியிற் காண்க. உரைம்என-உரையுமென் றுரைக்க.

166--8. வென்றி நெடுவேல் வேந்தன் கேட்ப-வெற்றி பொருந்திய பெரிய வேற்படையையுடைய மன்னவன் கேட்குமாறு, தீ தின்றாக செங்கோல் வேந்து என-அரசே நின் செங்கோல் தீ தின்றியிருக்க என்று கூறி, மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்-அம்முனி வர்களுள் ஒருவன் உரைப்பான்;

169--76. முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் கடியப்பட் டன ஐந்து உள - தத்துவத்தை யுணர்ந்த பெரியோரால் கடல் சூழ்ந்த உலகில் விலக்கப்பட்டன ஐந்து உள்ளன, அவற்றில் - அவற்றுள்ளே, கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளா தாகும் காமம்-கள் பொய் களவு கொலை ஆகிய நான்கு குற்றங்களையும் காமம் நீக்காதாகும், தம்பால் ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என-ஆகலின் தம்மிடத்து அக்காமத்தை நீக்கினோர் ஏனைய குற்றங்களையும் நீக்கினோராவர் என்று, நீங்கினர் அன்றே நிறைதவமாக்கள்-காமத்தை ஒழிந்தோரே நிறைந்த தவமுடையவர்கள், நீங்கார் அன்றே நீள்நில வேந்தே தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்-புவியினை ஆளும் அரசே அத்தகையகாமத்தினின்றும் நீங்காதோரே பொறுக்கவொண்ணாத நிரயத்தின்கண் வருந்துவோராவர் ;

முடிபொருள்-வேதாகமங்களால் அறுதியிடப்பட்ட பொருள் : பர தத்துவம். "அவற்றில்...தள்ளாதாகும் காமம்" என்றதனால் கடியப்