பட்ட ஐந்தாவன : கள், பொய், களவு, கொலை, காமம் என்பனவாதல் போதரும்
கள் முதலிய நான்கினையும் காமம் தள்ளாது எனவே காம முடையோர் ஏனைய நான்கு
குற்றங்களையும் உடையராவ ரென்ப தாயிற்று.
177-83. சேரிய
நெடுங்கண் சித்திராபதி மகள் - சிவந்த அரி படர்ந்த பெரிய கண்களையுடைய
சித்திராபதியின் மகள், காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள் மாதவி மாதவர்
பள்ளியுள் அடைந்தனள்-மாதவி காதலனாகிய கோவலன் இறந்த கொடிய துன்பத்தைப்
பொறாதவளாய் அறவோர் சாலையை அடைந்தனள், மற்றவள் பெற்ற மணிமேகலைதான்
முற்றாமுலையினள் முதிராக் கிளவியள் - அம்மாதவி பெற்ற மணிமேகலை யென்பவள்
முற்றாத கொங்கையும் முதிராத சொல்லும் உடையளாகியும், செய்குவன் தவம் எனச்
சிற்றிலும் பேரிலும் ஐயங்கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் - தவம் செய்வேன்
என்று சிறிய இல்லங்களிலும் பெரிய மனைகளிலும் பிச்சை யேற்று உண்டு உலக வறவியை
அடைந்தனள் ;
மகளாகிய
மாதவி பொறாள் அடைந்தனள் எனக் கூட்டுக. முதிராக்கிளவி - இளஞ்சொல்; மழலைமொழி.
முலையினளும் கிளவியளு மாகிய மணிமேகலை என்றலுமாம்.
184--9.ஆங்கவள்
அவ்வியல்பினளே ஆயினும் - மணிமேகலை அவ் வியல்பினை உடையவளாயினும், நீங்கான்
அவளை நிழல்போல் யாங்கணும் - அவளை எவ்விடத்தும் நிழல்போல நீங்காதவனாய்,
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள - அவள் பொருட்டுக் காமம் முற்றி, ஆரிருள்
அஞ்சான் அம்பலம் அடைந்தனன் - அரிய இருளிலே அஞ்சானாய் அம்பலத்தை அடைந்தனன்,
காயசண்டிகை வடிவாயினள் காரிகை-மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சைமாதின்
வடிவமெய்தினள், காயசண்டிகையும் ஆங்குளள் ஆதலின் - காயசண்டிகை என்பாள் முன்னர்
ஆங்கு இருந்தன ளாதலால் ;
அரசனுக்குக்
கடிதின் வெகுளியுண்டாகாமைப் பொருட்டு அடைந்தவன் உதயகுமரன் என்பதனை மாதவன்
முதற்கண் வெளிப்படைக் கூறிற்றிலனென்க. காயசண்டிகை பசிநீங்கி வானிலே செல்வுழி
விந்த மலையின் மேற்சென்று விந்தாகடிகையின் வயிற்றில் அடங்கினள் என (20:
114-21) மேல் உரைத்தமையின், ஈண்டு "ஆங்குளளாதலின் கணவனாகிய விஞ்சைய னொருவன்தோன்றி''
எனக் கூட்டியுரைத் தலுமாம்.
190--3. காயசண்டிகையின் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி - காயசண்டிகையின் கொழுநனாகிய
தப்பாத வாளினையுடைய விஞ்சையன் ஒருவன் தோன்றி, ஈங்கிவள் பொருட்டால் வந்தனன்
இவன் என! ஆங்கவன் தீவினை உருத்தது |