பக்கம் எண் :

பக்கம் எண் :325

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை

[பின்பு மன்னவன் அருளால் வாசந்தவையென்னும் முதியவள் மகன் துயரால் வருந்தும் இராசமாதேவியை அடைந்து அவள் வருத்தம் நீங்குமாறு பல கட்டுரைகள் கூறி ஒருவாறு ஆற்றுவித்துச் சென்றனள்; அவள் சென்ற பின்பு, இராசமாதேவி தனது துயர் புறந்தோன்றாவண்ணம் அடக்கிக் கொண்டவளாய், ''மணிமேகலையை வஞ்சித்து வருத்துவேன்'' என்று எண்ணி அரசனைச் சார்ந்து, ''செங்கோல் வேந்தே! மணிமேகலையின் பிக்குணிக் கோலத்தைக் கண்டு அறிவு திரிந்த உதயகுமரன் அரசாட்சிக்கு உரியவனல்லன்; அவன்அக்கொடுந் தொழிலால் இறந்தது தக்கதே; தனது இளமையைப் பயன்றறதாகச் செய்த பேரறிவுடையளாகிய மணிமேகலைக்குச் சிறை தக்கதன்று, ''என் றாள். அரசன், ''நின் கருத்து அவ்வாறாயின் அவளைச் சிறையினின்றும் விடுவி'' என்றனன்; என்றலும், மாதேவி அவளைச் சிறையினின்றும் விடு வித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அவளைத் துன்புறுத்தல் கருதி மயக்கும் மருந்தூட்டியும், தீங்கியற்றுமாறு கல்லாவிளைஞனொரு வனை ஏவியும், பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறையில் அடைவித்தும், அவள் ஒன்றானும் துன்பமின்றி யிருந்தமை கண்டு வியந்து நடுங்கி, அவளைநோக்கி, ''மகனையிழந்த துன்பம் பொறுக்கலாற்றாது இத் தீங்குகளைச் செய்தேன்; இவற்றை நீ பொறுத்தருளவேண்டும்'', எனப் பலவாறுவேண்டினள். வேண்டவே மணிமேகலை, ''சென்ற பிறப்பில் நீல பதியின் வயிற்றிற் றோன்றிய இராகுலனை நஞ்சுவிழியரவு உயிருண்ட பொழுது அதனைப் பொறாது தீயிற் பாய்ந்து என்உயிரைவிட்ட நாளில் இளங்கோன் பொருட்டு எங்கிருந்தழுவாய் ? இப்பொழுது நின் மகனுடைய உடற்கழுதனையோ? உயிர்க்கழுதனையோ? உடற்கு அழுதனை யேல் அதனை யெடுத்துப் புறங்காட்டிட்டவர் யார்? உயிர்க்கு அழுதனை யேல் வினையின்வழி அது சென்று புகும் உடம்பினை உணர்தல் அரிது; அவ்வுயிர்க்கு நீ அன்பினையாயின் எவ்வுயிர்க்கும் இரங்குதல் வேண்டும்,'' என்றுரைத்து, மற்றும், ''நின் மகனை விஞ்சையன் வெட்டி வீழ்த்துதற் குக் காரணமாயிருந்தது முற்பிறப்பில் அவன் மடைத்தொழிலாள னொருவனை வெட்டி வீழ்த்திய தீவினையேயாகும்'', என்று கூறி, ''இச் செய்திகளை நீ எங்ஙனம் அறிந்தாயோ? என்னில், நடந்தது இவ்வாறாகும்,'' என்றுதான் உவவனஞ் சென்றது முதலாகத் தெய்வக் கட்டுரை தெளிந்தது ஈறாக யாவற்றையும் விளங்க வுரைத்தனள். உரைத்தவள் பின்னும், ''நீ மருந்தால் எனக்குப் பரித்தேற்றினை; யான் மறு பிறப் புணர்ந்தேனாதலின் சிறிதும் அறிவு பிறழா திருந்தேன்; உன் ஏவலால் கல்லாக்கயவன் என்பால் வந்தகாலை வேற்றுரு வெய்துவிக்கும் மந்திரவலியால் ஆணுருக்கொண்டிருந்தேன் ; நோயில்லாத என்னைப் பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறையில் அடைப்பித்தாய்; ஊனொழி மந்திர முடைமையினாலே அத்துன்பத்தினின்றும் தப்பினேன். நீ சென்ற பிறப்பில் எனக்குக் கணவனாயிருந்த இராகுலனுக்கு இப்