பிறப்பில் ஈன்ற தாயாதலின்
உனது துயரினைக் களைந்து தீவினையைப் போக்கி உன்னை ஈன்னெறிப்படுத்தற்
பொருட்டே வான் வழியே செல்லுதலையும், வேற்றுருக் கொள்ளுதலையும் யான் நினைந்திலேன்;
உனது தடுமாற்றம் நீங்கி, யான் கூறும் இன்னுரையைக் கேட்பாயாக; காமம், கொலை,
கள், பொய், களவு என்னும் ஐந்தும் பெருந்துன்பம் விளைப்பனவாகலின், இவற்றைக்
கைவிடுதல் வேண்டும்; இவற்றைத் துறந்தேரே சீல முடையோராவர்; செற்றத்தை
அடக்கினோரே முற்றவுணர்ந்தோராவர்; வறியோர்க்கு இல்லாதவற்றை அளிப்பவரே
வாழ்பவர் எனப்படுவர்; வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கினோரே
மறுமை யுலகினை அறிந்தோராவர்; மன்பதைக்கெல்லாம் அன்பு ஒழியாதவரே தத்துவத்தை
உணர்ந்தோராவர்,'' என்று ஞானமாகிய நீரினை இராசமாதேவியின் செவியில்
வார்த்து, அவளது துயாராகிய தீயினை மணிமேகலை அவிப்ப, அவள் மனந்தெளிந்து
மணிமேகலையை வணங்கினள். மணிமேகலை அதனைப் பொறாளாகி, ''நீ என் கணவனைப்
பெற்ற தாயாதலன்றி, அரசனுடைய மாபெருந் தேவியாகவும் உள்ளாய்; ஆதலால் என்னை
வணங்குதல் தகுதியன்று,'' என்று கூறித் தானும் அன்புடன் அவளை வணங்கினாள்.]
|