பக்கம் எண் :327 |
|
Manimegalai-Book Content
23,
சிறைவிடு காதை
|
20
25
30
35
40
45
50
|
மன்பதை காக்கு மன்னவன்
றன்முன்
துன்பங் கொள்ளே லென்றவள் போயபின்
கையாற் றுள்ளங் கரந்தகத் தடக்கிப்
பொய்யாற் றொழுக்கங் கொண்டுபுற மறைத்து
வஞ்சஞ் செய்குவன் மணிமே கலையையென்
றஞ்சி லோதி யரசனுக் கொருநாள்
பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்
தறிவு திரிந்தோ னரசியல் தானிலன்
கரும்புடைத் தடக்கைக் காமன் கையற
அரும்பெற லிளமை பெரும்பிறி தாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச்
சிறைதக் கன்று செங்கோல் வேந்தெனச்
சிறப்பின் பாலார் மக்க ளல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க் கென்பது
அறிந்தனை யாயினிவ் வாயிழை தன்னைச்
செறிந்த சிறைநோய் தீர்க்கென் றிறைசொல
என்னோ டிருப்பினு மிருக்கஇவ் விளங்கொடி
தன்னோ டெடுப்பினுந் தகைக்குந ரில்லென்று
அங்கவள் தனைக்கூஉய் அவள்தன் னோடு
கொங்கவிழ் குழலாள் கோயிலுட் புக்காங்கு
அறிவு திரித்திவ் வகனக ரெல்லாம்
எறிதரு கோலம்யான் செய்குவ லென்றே
மயற்பகை யூட்ட மறுபிறப் புணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவின ளாகக்
கல்லா விளைஞ னொருவனைக் கூஉய்
வல்லாங்குச் செய்து மணிமே கலைதன்
இணைவள ரிளமுலை யேந்தெழி லாகத்துப்
புணர்குறி செய்து பொருந்தின ளென்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்குரை யென்றே
காணம் பலவுங் கைநிறை கொடுப்ப
ஆங்கவன் சென்றவ் வாயிழை யிருந்த
பாங்கி லொருசிறைப் பாடுசென் றணைதலும்
தேவி வஞ்ச மிதுவெனத் தெளிந்து
நாவியன் மந்திரம் நடுங்கா தோதி
|
|
|
|
|