பக்கம் எண் :

பக்கம் எண் :328

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை



55





60





65





70





75





80





85

ஆண்மைக் கோலத் தாயிழை யிருப்பக்
காணம் பெற்றோன் கடுந்துய ரெய்தி
அரச ருரிமையி லாடவ ரணுகார்

நிரயக் கொடுமகள் நினைப்பற்றி யேனென்
றகநகர் கைவிட்ட டாங்கவன் போயபின்
மகனைநோய் செய்தாளை வைப்ப தென்னென்று
உய்யா நோயி னூணொழிந் தனளெனப்
பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை யடைப்ப

ஊணொழி மந்திர முடைமையின் அந்த
வாணுதல் மேனி வருந்தா திருப்ப
ஐயென விம்மி யாயிழை நடுங்கிச்
செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்
என்மகற் குற்ற இடுக்கண் பொறாது

பொன்னே ரனையாய் பொறுக்கென றவள்தொழ
நீல பதிதன் வயிற்றிற் றோன்றிய
ஏலங் கமழ்தா ரிராகுலன் றன்னை
அழற்கண் நாகம் ஆருயி ருண்ண
விழித்த லாற்றே னென்னுயிர் சுடுநாள்

யாங்கிருந் தழுதனை யிளங்கோன் றனக்குப்
பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ
உடற்கழு தனையோ லுன்மகன் றன்னை
எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே

உயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது
அவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி
எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்
மற்றுன் மகனை மாபெருந் தேவி

செற்ற கள்வன் செய்தது கேளாய்
மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை
உடற்றுணி செய்தாங் குருத்தெழும் வல்வினை
நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே

யாங்கறிந் தனையோ ஈங்கியது நீயெனிற்