90
95
100
105
110
115
120
|
பூங்கொடி நல்லாய் புகுந்த திதுவென
மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலாத்
தெய்வக் கட்டுரை தெளிந்ததை யீறா
உற்றதை யெல்லா மொழிவின் றுரைத்து
மற்று முரைசெயும் மணிமே கலைதான்
மயற்பகை யூட்டினை மறுபிறப் புணர்ந்தேன்
அயர்ப்பது செய்யா அறிவினே னாயினேன்
கல்லாக் கயவன் காரிருட் டான்வர
நல்லாய் ஆணுரு நான்கொண் டிருந்தேன்
ஊணொழி மந்திர முடைமையி னன்றோ
மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது
அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும்
சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து
தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்
தையா லுன்றன் றடுமாற் றவலத்து
எய்யா மையல்தீர்ந் தின்னுரை கேளாய்
ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக்
காருக மடந்தை கணவனுங் கைவிட
ஈன்ற குழவியொடு தான்வே றாகி
மான்றோர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப்
புதல்வன் றன்னையோர் புரிநூன் மார்பன்
பதியோ ரறியாப் பான்மையின் வளர்க்க
ஆங்கப் புதல்வன் அவள்திற மறியான்
தான்புணர்ந் தறிந்துபின் றன்னுயிர் நீத்ததும்
நீர்நசை வேட்கையி னெடுங்கட முழலும்
சூன்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக்
கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப
மான்மறி விழுந்தது கண்டு மனமயங்கிப்
பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய னாகி
உயிர்ப்பொடு செங்க ணுகுத்த நீர்கண்டு
ஓட்டி யெய்தோ னோருயிர் துறந்ததுங்
கேட்டு மறிதியோ வாட்டடங் கண்ணி
கடாஅ யானைமுன் கட்கா முற்றோர்
|