பக்கம் எண் :

பக்கம் எண் :330

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை





125





130





135





140





145
விடாஅது சென்றதன் வெண்கோட்டு வீழ்வது
உண்ட கள்ளி னுறுசெருக்காவது
கண்டு மறிதியோ காரிகை நல்லாய்
பொய்யாற் றொழுக்கம் பொருளெனக் கொண்டோர்
கையாற் றவலங் கடந்தது முண்டோ

களவேர் வாழ்க்கைய ருறூஉங் கடுந்துயர்
இளவேய்த் தோளாய்க் கிடுவென வேண்டா
மன்பே ருலகத்து வாழ்வோர்க் கிங்கிவை
துன்பந் தருவன துறத்தல் வேண்டும்
கற்ற கல்வி யன்றாற் காரிகை

செற்றஞ் செறுத்தோர் முற்ற வுணர்ந்தோர்
மல்லன்மா ஞாலத்து வாழ்வோ ரென்போர்
அல்லன் மாக்கட் கில்லது நிரப்புநர்
திருந்தே ரெல்வளை செல்லுல கறிந்தோர்
வருந்தி வந்தோ ரரும்பசி களைந்தோர்

துன்ப மறுக்குந் துணிபொரு ளுணர்ந்தோர்
மன்பதைக் கெல்லா மன்பொழி யாரென
ஞான நன்னீர் நன்கனந் தெளித்துத்
தேனா ரோதி செவிமுதல் வார்த்து
மகன்றுயர் நெருப்பா மனம்விற காக

அகஞ்சுடு வெந்தீ யாயிழை யவிப்பத்
தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து
மாறுகொண் டோரா மனத்தின ளாகி
ஆங்கவள் தொழுதலு மாயிழை பொறாஅள்
தான்றொழு தேத்தித் தகுதி செய்திலை

காதலற் பயந்தோ யன்றியுங் காவலன்
மாபெருந் தேவியென் றெதிர்வணங் கினளென்.
 

உரை

1--10 மன்னவன் அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங்கூந்தல் நரை மூதாட்டி-அரசன் ஆணையால் அழகிய நீண்டகூந்தல்நரைத்த முதியோளாகிய வாசந்தவை என்பாள், அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் திருநிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் - அரசற்கும் அரச குமரற்கும் திருவனைய நிலவுரிமைத் தேவியர்க்கும், கட்டுரை விரித்துக் கற்றவை பகர்ந்தும் - பொருள் பொதிந்த சொற்களை விரித்துக் கூறியும் தாங்கற்றனவற்றை எடுத்துரைத்தும், பட்டவை