விசை யவுணர்...இடனுங் காண்கும்" என்பதனாலும், "முன்
னாளிந்திரன் ...பூதம்" என்னும் உரை மேற்கோளாலும் அறிக. நரகர்-
1
"தவ
மறைந் தொழுகுந் தன்மையி லாளர், அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர், அறைபோ
கமைச்சர், பிறர்மனை நயப்போர், பொய்க் கரியாளர், புறங்கூற்றாளர் என்னுமிவர்.
பூதம்-சதுக்கப்பூதம். பொருந்தாதாயிடும் - நகரை விட்டு நீங்கும் எனினுமாம்.
கால் கொள்க வென்று சமயக்கணக்கர் முதலாயினோர் கூறவென்க.
27--34. வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்-வச்சிரப்படை
நிற்குங் கோயிலின்கணுள்ள விழாமுரசினை, கச்சையானைப்
பிடர்த்தலை ஏற்றி-கச்சையை யணிந்த யானையின் பிடரினிடம்
ஏற்றி, ஏற்று உரி போர்த்த இடியுறு முழக்கிற் கூற்றுக்கண்
விளிக்கும் குருதி வேட்கை-வென்ற நல்லேற்றின் உரியாற்
போர்க்க்கப்பட்டதும் இடியை யொத்த முழக்கத்தை
யுடையதும் கூற்றுவனை யழைப்பதும் குருதிப் பலிகொள்ளும்
விருப்பத்தினை யுடையதுமாகிய, முரசு கடிப்பிடூஉம் முதுகுடிப்
பிறந்தோன் - வீர முரசத்தைக் குறுந்தடிகொண்டு அறைகின்ற
தொல்குடிப் பிறந்த வள்ளுவன், திரு விழைமூதூர் வாழ்க
என்று
ஏத்தி-திருமகளும் விழைகின்ற தொன்னகர் வாழ்க என்று
துதித்து, வானம் மும்மாரி பொழிக-மேகம் மாதம் மும்முறை
மழை
பொழிக, மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன்
ஆகுக -
அரசன் கோள்கள் நிற்கும் நிலை குலையாமைக்குக் காரணமாகிய
செங்கோலை யுடையவனாகுக என வாழ்த்தி ;
கச்சை - அடி வயிற்றிற் கட்டுங் கயிறு. பிடர்த்தலை - பிடரிடம். வீர முரசிற்கு
வென்ற ஏற்றின் தோலை மயிர் கழியாது போர்த்தல் மரபு; இதனை''
2
;"
மண்கொள வரிந்த வைந்துதி மருப்பின், அண்ணனல்லே றிரண்டுடன் மடுத்து, வென்றதன்
பச்சை சீவாது போர்த்த, திண்பிணி முரசம்" என்பதனாலறிக. இடியுறு: உறு -
உவமவுருபு. இடியுரும் என்னும் பாடத்திற்கு இடியேறு என்க. கூற்றுக்கண் : கண் -
அசை. கடிப்பிகூஉம் என்னும் பாடத்திற்கும், இகூஉம்-அறையுமென்னும் பொருட்டாம்;
3
;" முரசுகடிப் பிகுப்பவும்"
என்பது காண்க. என்று வாழ்த்தியென விரித்துரைக்க. மூதூர் வாழ்க மாரிபொழிக
கோலோனாகுக என்று ஏத்தி என்னலுமாம்; ஏத்தி-வாழ்த்தி. அரசனது கோல் கோடின்
கோட்கள் நிலை திரியும் என்பது,
4
"கோனிலை
திரிந்திடிற் கோணிலை திரியும்"
5
"கோணிலை
திரிந்து...அரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றாலும் அறியப்படும். முதுகுடிப்
பிறந்தோன் முரசம் ஏற்றி ஏத்தி
என்றியைக்க.
1
சிலப். 5: 128-31.
2
புறம். 287.
3
புறம். 157.
4
மணி. 7:
8.
5
சீவக. 255.
|