35--42. தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் - நாவலந் தீவிற்குச்
சாந்தியாகிய இந்திர விழவினைக் கொண்டாடு
நாட்களில், ஆயிரங்
கண்ணோன் தன்னோடு-ஆயிரங் கண்களையுடைய புரந்தரனோடு,
ஆங்குள நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பின்
பால்வேறு
தேவரும் இப்பதிப் படர்ந்து-ஆண்டுள்ள நால்வகையாகப்
பிரிக்கப்படும் முப்பத்து மூவராகிய தேவரும் நன்மைசால்
சிறப்புடையராகிய பதினெண் கணங்களும் இந்நகரத்தினை
நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய
நாள்-கரிகாற்
பெருவளத்தான் என்னும் மன்னர் பெருமான் இந்நகரினின்றும்
நீங்கி வட திசையிற் போருக்குச் சென்ற
ஞான்று, இந்நகர்
போல்வதோர் இயல்பினது ஆகி-இப்பதி வறிதாகிய தன்மைபோல,
பொன் நகர் வறிதாப் போதுவர் என்பது - பொன்னுலகம்
வறிதா
குமாறு ஈண்டு அடைவர் என்பது, தொல்நிலை உணர்ந்தோர்
துணி
பொருள் ஆதலின்-பழமையை அறிந்தோர்களால் துணியப்பட்ட
பொருளாகலின் ;
நாவலந் தீவின் காவற்றெய்வம் முற்காலத்தில்
இத்தீவிலுள்ளார்க்கு அவுணரால் வருந்துன்பத்தை ஒழித்தற் பொருட்டாக இந்திரனுக்குச்
செய்தமையால் இந்திரவிழா தீவகச்சாந்தி எனப்பட்டது.
1
"நாவலோங்கிய
மாபெருந் தீவினுட், காவற்றெய்வதந் தேவர்கோற்கெடுத்த, தீவகச் சாந்தி"
என மேல் வருதல் காண்க. இனி, இந்நகருக்குளவாகுந் துன்பங்களை யொழித்தற்குச்
செய்யப்படும் இவ்விழா தீவிற்குச் செய்வதனை யொக்கு மென்னுங் கருத்தால்
தீவகச் சாந்தி யெனப்பட்டதெனினும் அமையும்; இவ்வூ ரம்பலம் "உலக வறவி"
(7 : 93 ; 17 : 78, 86) என இக்காப்பியத்தும், இவ்வூர் வாயில்
2
"உலக
விடைகழி" எனச் சிலப்பதிகாரத்தும் கூறப்படுதல் காண்க. நால் வேறு தேவர்
- வசுக்கள் எண்மரும் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும்,
மருத்துவர் இருவரும் ஆகிய முப்பத்து மூவர். பால்-பகுதி. படர்ந்து-நினைந்து.
கரிகால் வளவன்-புகாரிலிருந்தரசாண்ட பெரு வீரனாகிய ஓர் சோழமன்னன் ;
இவன் வடநாட்டின்மீது படையெடுத்துச் சென்ற செய்தி
3
"செருவெங்
காதலிற் றிருமா வளவன்,...புண்ணியத் திசைமுகம் போகிய வந்தாள்" எனச்
சிலப்பதிகாரத்து வருதலான் அறியப்படும். வறிதா-வறுமையுடையதாக; தேவர் பலரும்
விழாக்காண இந்நகர்க்கு வந்துவிடுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டது.
43--45. தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்-தோரணங்
களையுடைய வீதிகளிலும் குற்றமற்ற மன்றங்கிளிலும்,
பூரண
கும்பமும் பொலம்பாலிகைகளும் பாவை விளக்கும்
பலவுடன்
பரப்புமின் - நிறைகுடங்களும் பொற்காலிகைகளும்
பாவை
விளக்குகளுமாகிய மங்கலப் பொருள் பலவற்றையும் ஒருங்கு
பரப்புமின் ;
1
மணி. 2 : 1-3.
2
சிலப்,
10-27.
3
சிலப். 5 : 60-4.
|