வேந்து : அண்மை விளி. என - என்று சொல்ல ; அஞ்சிலோதி ஒரு நாள் அரசனுக்குச்
சொல்ல வென்க.
31--4. சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார்
மன்னர்க்கு என்பது - அரசர்கட்கு அறிவொழுக்கம் முதலிய சிறப்பியல்புகளை யுடையவரே
புதல்வர் ஆவர் அல்லாதார் மறத்தற்குரியர் என்பதனை, அறிந்தனை ஆயின்-உணர்ந்தனை
யானால், இவ் ஆயிழை தன்னை - இந் நங்கையை, செறிந்த சிறை நோய் தீர்க்க
என்று இறை சொல - நெருங்கிய சிறைத் துன்பத்தினின்றும் நீக்குவாயாக என்று
அரசன் கூற ;
மறப்பின்
பாலார்-புதல்வரல்ல ரென மறக்கும் பகுதியின ரென்க. என்பது-என்னுமுண்மையை. நீயே
அறிந்தனையாயின் தீர்க்கவென்று சொல்ல வென்க.
35--8. என்னோடு இருப்பினும் இருக்க இவ்விளங்கொடி தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்லென்று
- இவ்விளங்கொடி போல்வாள் என்னுடன் இருப்பினும் இருக்க அன்றித் தனக்குரிய
ஓட்டினை ஏந்திப் பிச்சைக்குச் செல்லினும் தடுப்பவர் இல்லை என்று, அங்கவள்தனைக் கூஉய் - மணிமேகலையை அழைத்து, அவள் தன்னோடு - அவளுடன், கொங்கு அவிழ் குழலாள்
கோயிலுட் புக்கு - மணம் விரியும் கூந்தலையுடைய இராசமாதேவி அரண்மனையுட் புகுந்து
;
39--42. அறிவு
திரித்து - இவளது அறிவை மருந்தினால் வேறுபடுத்தி, இவ்வகல் நகர் எல்லாம்
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே - இவ்வகன்ற ஊரிலுள்ளோ ரனைவரும் இவளை
அடிக்கும் கோலத்தைச் செய்வேன் என்று கருதி; மயற்பகை யூட்ட - பித்தேறுதற்குக்
காரணமாகிய மருந்தை யூட்ட, மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள்
ஆக-மறு பிறப்பினை அறிந்த மணிமேகலை மறத்தலில்லா அறிவுடன் விளங்க ;
எறிதல் - கோலால் அடித்தல்; கல்லெறிதலுமாம்.
மயல் - மருள்; பித்து. மயலாகிய பகை யென்க. மயலூட்டலாவது - மருளுதற்குக் காரணமாகிய
மருந்தை யூட்டல். 1"வஞ்சமுண்டு
மயற்பகை யுற்றோர்" என்றார் இளங்கோ வடிகளும். "மயற்பகை யூட்டினை மறுபிறப்
புணர்ந்தேன், அயர்ப்பது செய்யா அறிவினே னாயினோன்" என இக்காதையுட் பின்
வருதலும் அறியற்பாற்று.
43--8. கல்லா
இளைஞன் ஒருவனைக் கூஉய் - கல்வி யில்லாத இளைஞன் ஒருவனை அழைத்து, வல்லாங்குச்
செய்து-வல்லமை செய்து, மணிமேகலை தன் இணைவளர் இளமுலை-மணிமேகலை தன் இளங்க
கொங்கைகள், ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்-எனது
மிக்க அழகினையுடைய மார்பின்கண
1
சிலப், 1:122.
|