பக்கம் எண் :

பக்கம் எண் :335

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை
 
அறையில் அடைத்து வைக்க, ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப-மணிமேகலை பசியை ஒழிக்கும் மந்திரம் உடையளாயினமையால் உடல் வாடாது மகிழ்ச்சியுடன் இருக்க, ஐயென விம்மி ஆயிழை நடுங்கி-அரசன் றேவி விரைவுடன் பொருமி நடுக்கமெய்தி, செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் - தவமகளாகிய நினக்குத் துன்பத்தைச் செய்தேன், என்மகன் உற்ற இடுக்கண் பொறாது-என் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவளாய், பொன் னேரனையாய் பொறுக்க என்று அவள் தொழ - திருமகள் போல்வாய் பொறுத்துக் கொள்க என்று பெருந்தேவி வணங்க;  

மணிமேகலை காரணமாக உதயகுமரன் இறந்தமையின் ''மகனை நோய் செய்தாளை'' என்றாள். என்னென்று - பொருந்தாதென்று என்ற படி. புழுக்கறை - புழுங்கச் செய்யும் அறை ; ''புழுக்கறைப் பட்டோர் போன்று" (3.95) என முன் வந்தமையுங் காண்க. (இராச மாதேவி) என்னென்று காட்டி அடைப்ப வென்க. செய்தவத்தாட்டியை: முன்னிலையிற் படர்க்கை. சிறுமை - துன்பம், குற்றம்; என்றது மயற்கை யூட்டியது முதலிய மூன்றையும். பொறாது சிறுமைசெய்தேன் எனக் கூட்டுக.

67--79. நீலபதிதன் வயிற்றில் தோன்றிய - நீலபதி என்பவளது வயிற்றிற் பிறந்த, ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை - மணங்கமழும் மாலையினையுடைய இராகுலனை, அழற் கண் நாகம் ஆருயிர் உண்ண - நஞ்சுவிழி அரவு உயிரைக்கொள்ள, விழித்தல் ஆற்றேன் என்னுயிர் சுடு நாள் - உயிர் வாழ்தலைப் பொறாமல் யான் என துயிரைத் தீயிலிட்ட ஞான்று, யாங்கிருந்து அழுதனை இளங்கோன் தனக்கு - நீ இளங்கோவிற்கு எங்கிருந்து அழுதாய், பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை-பூங்கொடியனைய தேவி பொருந்தாதனவற்றைச் செய்தாய், உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ - நீ நின் மகனது உடலுக்கு அழுதாயோ அன்றி உயிரினுக்கு அழுதாயோ, உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே - உடலின் பொருட்டு அழுதாயானால் நின் மகனைப் புறங்காட்டிலிட்டோர் யாவர், உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது - உயிரின் பொருட்டு அழுதாயேல் செய்வினை வழியே அவ்வுயிர் புகுமிடத்தைத் தெளிய அறிய ஒண்ணாது, அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்-ஆராய்ந்த வளையல்களையுடையவளே நின் மகனது உயிரினிடம் நீ அன்புடைமை யானால் எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொள்ளல் வேண்டும் ;

அழற்கண் நாகம் - திட்டிவிடம் என்னும் பாம்பு ; பார்வையால் உயிர் கொல்வது. விழத்தல் என்பது பாடமாயின், இழத்தல் எனப்