பக்கம் எண் :

பக்கம் எண் :336

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை
 

பிரித்துக் கணவனை யிழந்திருத்தலை ஆற்றேனாய் எனப் பொருள் கொள்க. யாங்கிருந்தழுதனை - அழுதிலாய் என்றபடி, புக்கில்-புகும் இடம்; உடம்பு. வினையால் உயிர் புகும் புக்கில் உணர்வரிய தென்க. ஆய் தொடி: விளி. எவ்வயிர்காயினும் - எல்லாவுயிர்கட்கும். உடம்பிலன்றி உயிரின்கண் வேற்றுமை யின்மையால் அவ்வுயிர்க் கன்பினையாயின் எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் என்றாள் ; அன்றி, எல்லாவுயிர்க்கும் அன்பு செய்வுழி நின் மகனுயிர்க்கும் அன்பு செய்தாயாவை என்றாளுமாம்.

80--5.   மற்று உன் மகனை மாபெருந்தேவி செற்றகள்வன் செய்தது கேளாய் - அரசமாதேவி, மற்றும் நின்மகனைச் சினந்த காஞ்சனன் கொலைபுரிதற்குக் காரணமான தீவினையைக் கேட்பாயாக, மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்தாங்கு உருத்தெழும் வல்வினை - சோற்றுக் கலம் சிதைமாறு வீழ்ந்த அட்டிலாளனை உடலைத் துண்டமாக வெட்டியமையால் தோன்றி எழுந்த வலிய வினையானது, நஞ்சு விழி அரவின் நல்லுயிர் வாங்கி-விழியில் நஞ்சினைக் கொண்ட பாம்பினால் அவனது நல்லுயிரைக் கொண்டு, விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே-இப்பிறவியில் விஞ்சையனது வாளினால் வீழ்த்தியது ;

மாபெருந்தேவி: விளி. கள்வன் - காஞ்சனன். செற்றக் கள்வன் என்பது பாடமாயின், செற்றமாகிய கள்வன் என உருவக மாக்குக. உருத்து - உருக்கொண்டு, சென்ற பிறப்பிலே அரவினால் உயிர் வாங்கி இப்பிறப்பிலே வாளல் வீட்டியது என்க. வீட்டியது - கொன்றது ; வீழ்த்தியது என்பதன் மரூஉவுமாம்.

86--90.   யாங்கறிந்தனையோ ஈங்கிது நீ எனில்-நீ இதனை எங்ஙனம் அறிந்தனை என வினாவின், பூங்கொடி நல்லாய்புகுந்ததுஇது என - பூங்கொடி போல்வாய் நிகழ்ந்தது இது வென்று, மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா-மலர் கொய்யும் பொருட்டுச் சுதமதியுடன் தான் உவவனம் சென்றது முதலாக, தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா - கந்திற்பாவையின் பொருண்மொழிகளைக் கேட்டுத் தெளிவுற்றது இறுதியாக, உற்றதை எல்லாம் ஒழிவின்று உரைத்து - நிகழ்ந்தன அனைத்தையும் தப்பாமற் கூறி ;

ஈங்கிது - இச் செய்தி. கட்டுரையால் தெளிந்ததென்க. தெளிந்ததை: ஐ: அசை. உற்றதை யெல்லாம் ஒருமைப் பன்மை மயக்கம்.

91--7.   மற்றும் உரை செய்யும் மணிமேகலை தன்-மணிமேகலை பின்னுங் கூறுவாள், மயற்பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன் - பித்தேற்றும் மருந்தை யுண்பித்தாயாகவும் மறு பிறப்பினை அறிந்தேன் ஆகலின் மறத்தலில்லா அறிவுடையேனாயினேன், கல்லாக் கயவன் கார் இருள் தான்வர நல்லாய் ஆணுரு நான் கொண்டு இருந்தேன் - மெல்லியலே அறிவிலாக் கீழ்மகன் கரிய இருளின்கண் வர யான்