வந்துள்ளமை காண்க. காருக மடந்தை-நெய்வோர் குலத்துப் பிறந்த மாது எனவும்
பொருள் படும். வரையாள் - தனது நலத்தினை நுகர்தற்குரியவர் உரியரல்லாதவர்
என்னும் வரையறை யில்லாளாய்; பொருள் கொடுப்பார் யாவர்க்கும் விற்று என்றபடி.
இதனால் காமத்தின் தீமை கூறப்பட்டது.
112--9. நீர்
நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூல்முதிர் மடமான் வயிறு கிழித்து ஓட-நீரை
நச்சிய விருப்பத்தால் பெரிய காட்டின்கண் வருந்துகின்ற சூல் முதிர்ந்த இளையமானினது
வயிற்றைக் கிழித்துச் செல்லுமாறு, கானவேட்டுவன் கடுங்கணை துரப்ப - காட்டில்
வேட்டையாடுவோன் கடிய அம்பினைச் செலுத்த, மான் மறி விழுந்தது கண்டு மனமயங்கி
- மான்குட்டி வயிற்றினின்றும் விழுந்தனைக் கண்டு உளங் கலங்கி, பயிர்க்குரல்
கேட்டு அதன் பான்மைய னாகி - அதனது விளியோசையைக் கேட்டு அதன் பக்கத்தோனாகி,
உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர் கண்டு-நெட்டுயிர்ப்புடன் அதனது சிவந்த
கண்களினின்று சிந்துகின்ற நீரினைக் கண்ணுற்று, ஓட்டி எய்தோன் ஓருயிர் துறந்ததும்
- அம்பினை வீசி எய்த வேட்டுவன் தன் உயிரைத் துறந்தனையும், கேட்டும் அறிதியோ
வாள் தடங் கண்ணி - வாள்போலும் பெரிய கண்களையுடையாய் நீ கேள்வியுற்றும்
அறிவாயோ ;
தன்னுயிர்
நீத்ததும் ஓருயிர் துறந்ததும் கேட்டும் அறிதியோ என்க. மான்மறி - பெண் மானுமாம்.
பயிர்தல் - அழைத்தல். அதன் பான்மையனாகி - அதன் இயல்பினனாகி என்றுமாம்.
ஓட்டி எய்தோன் வேட்டுவன்: சுட்டு. இதனால் கொலையின் தீமை கூறப்பட்டது.
120--3. கடாஅ யானைமுன்
கட் காமுற்றோர் விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது-கள்ளை விரும்பி
யுண்டோர் மதம் பொருந்திய யானையின் முன்னர் நீங்காமற் சென்று அதன் வெள்ளிய
மருப்பிலே வீழ்வது, உண்ட கள்ளின் உறுசெருக்காவது கண்டும் அறிதியோ காரிகை
நல்லாய்-அழகிய நங்காய் அவர் கள்ளுண்டதனாற் போந்த பெருங்களிப்பினால்
நிகழ்வதனைக் கண்டிருக்கின்றனையோ ;
கள்ளுண்டு
களித்தோர் இங்ஙனம் யானைமுன் சென்று உயிர் துறத்தல் 1"புதுக்கோள்
யானைமுன் போற்றாது சென்று, மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்" என்பதனாலும்
அறியப்படும். இதனால் கள்ளின் தீமை கூறப்பட்டது.
124--5. பொய்யாற்று
ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர் - பொய்ந் நெறிக்கண் ஒழுகுதலைக் காரியமாகக்
கொண்டவர்கள், கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ - செயலறவாகிய துன்பத்தினின்றும்
நீங்கியதும் உண்டோ ;
1
மணி. 32: 45--6.
|