பக்கம் எண் :

பக்கம் எண் :339

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை
 

எஞ்ஞான்றும் துன்புறுவர் என்றபடி. இதனால் பொய்ம்மையின் தீமை கூறப்பட்டது.

126--7.   களவு ஏர் வாழ்க்கையர் உறூஉங் கடுந்துயர் - களவாகிய ஏரால் உழுதலைச் செய்து வாழ்வோர் அடையுங் கொடிய துன்பத்தை, இளவேய்த் தோளாய்க்கு இது என வேண்டா - இளைய மூங்கிலனைய தோள்களையுடைய நினக்கு யான் இத்தகைத்து எனக் கூறுதல் வேண்டா;

உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவினை யளிப்பது உழவுத்தொழிலாகலின், பிற சில தொழில்களையும் உழவாக உருவகப்படுத்தி, வில்லேருழவர் சொல்லேருழவர் என்றிங்ஙனங் கூறுவர் சான்றோர் களவாகிய ஏரால் உழுது வாழ்தலாவது களவினாற் பிறர் பொருளை வௌவி உண்டு வாழ்தலாம்: 1"கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோர்" என்றார் பிறரும். களவு செய்தோர் கடுந்துயர் உறுதல் வெளிப்படையாகலின் ''இதுவென வேண்டா'' என்றாளென்க. இதனால் களவின் தீமை கூறப்பட்டது.

128--9.   மன்பே ருலகத்து வாழ்வோர்க்கு - மிகப் பெரிய உலகத்தில் வாழும் மக்களுக்கு, இங்கிவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் - ஈண்டுக் கூறப்பட்ட காமம் முதலிய ஐந்தும் துன்பந் தருவன வாகலின் அவற்றைக் கைவிடல் வேண்டும்;

130--41.   கற்ற கல்வி அன்றால் காரிகை-காரிகையே கற்ற கல்வியே மெய்யுணர்வாகாது, செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் - அகத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கினோரே முழுவதும் உணர்ந்தோராவார், மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்க் இல்லது நிரப்புநர் - வறுமைத் துன்பமுடைய மக்களுக்கு வேண்டுவனவற்றை அளிப்போரே வளப்பமுடைய பெரிய பூமியின்கண் வாழ்வோர் எனப்படுவர், திருந்தேர் எல்வளை- திருந்திய அழகமைந்த ஒள்ளிய வளையினையுடையாய். செல்லுலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர் - பசியால் வருந்தி வந்தோரது தீர்த்தற்கரிய பசியை நீக்கினோரே செல்லுலகம் அறிந்தவராவர், துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என - உயிர்ப்பன்மைகட் கெல்லாம் அன்பு நீங்காதோரே துன்பத்தினை யறுக்கும் மெய்ப் பொருளை யறிந்தோராவர் என்று, ஞான நன்னீர் நன்கனம் தெளித்து - ஞானமாகிய நல்ல நீரை நன்றாகத் தெளித்து, தேனார் ஓதி செவி முதல் வார்த்து - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய இராசமாதேவியின் செவியிடம் வார்த்து, மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடும் வெந்தீ ஆயிழை அவிப்ப - புதல்வ


1 பெரும்பாண். 40-1.