[உதயகுமரன் விஞ்சையன் வாளால் வெட்டுண்டு துஞ்சியதனையும், மணிமேகலை சிறையில்
வைக்கப்பட்டிருத்தலையும் கேட்டு வருந்தி நடுங்கி, அவளைச் சிறையினின்றும்
விடுவிக்க நினைந்த சித்திராபதி அரசன் தேவிபாற் சென்று வணங்கி, ''மாபெருந்தேவி!
கோவல னிறந்தா னென்று மாதவி தனது பரத்தமைத் தொழிலை நீத்துத் தவப்பள்ளியை அடைந்ததும், அவள் மகளாகிய அரங்கக் கூத்தி பாத்திர மேந்தி மனைதோறுஞ்
சென்று ஐயமேற்றதும் யாவரும் எள்ளி நகுதற்குரிய வாயின. இது நிற்க; உதயகுமரன்
இறந்த தன்றி, மணிமேகலையால் இனி, இந் நகரத்திற் குண்டாகும் பெருந்துன்பமும்
ஒன்றுண்டு; கேட்பாயாக; "முன்னொருநாள் மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி இந்நகரில்
கடற்கரையைச் சார்ந்த புன்னைமரச் சோலையில் பேரழகினளாகிய ஒரு மங்கையைக்
கண்டு காதலித்து அவளோடும் ஒரு திங்களளவும் அச்சோலையில் உறைவானாயினன்;
அம்மங்கை அவனிடஞ் சொல்லாது அகன்றனள்; அரசன் இளங்கொடி யாங் கொளித்தனளென்று
பலவிடத்தும் தேடுவனாயினன்; அப்பொழுது நிலத்திற் குளித்தல் முதலிய அரிய
ஆற்றல்களையுடைய சாரண னொருவன் வந்தனன்; அரசன் அவனை வணங்கி முன்னின்று
''என் உயிர் போல்வாள் ஒருத்தி ஈங்கு ஒளித்தனள்; அவளை அடிகள் கண்ட துண்டாயிற்
கூறுக,'' என்று கேட்ப, அந்தச் சாரணன், ''அரச! அம்மடந்தையை யான் இப்பொழுது
கண்டிலேனாயினும் முன்பு அறிந்துளேன்; அவள் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பவனுடைய
தேவியான வாசமயிலை யென்பவள் வயிற்றிற் றோன்றியவள்; பீலிவளை யென்னும்
பெயரினள்; அவள் பிறந்த நாளில் நிமித்திகனானவன் ''இவள் பரிதிகுலத்தரச
னொருவனைக் கூடிக் கருவுற்று வருவாள்,'' என்று அரசனுக்குக் கூறினன்; ''அவளே நீகூறிய
மடந்தை; இனி, அவள் வயிற்றிற்றோன்றும் மகனே வருவான்; அவள் வாராள்;
நீ கவலாதிருக்கக் கடவை; இன்னு மொன்று கேள்; இந்திர விழாச் செய்யாத
நாளில் மணிமேகலா தெய்வத்தின் சொல்லால் உன் நகரினைக் கடல் கொள்ளும்;
இந்திர சாப மிருத்தலால் அது தப்பாது; இதனை உண்மை யெனக்கொண்டு இந் நகரைக்
கடல் கொள்ளதபடி ஆண்டுதோறும் இந்திரவிழாவை மறவாது செய்து வருக,'' என்று
சொல்லி விட்டுப் போயினன்; அந்நாள் தொடங்கி இந்நகருக்கு எப்பொழுது
கேடு வருமோ என்று யாவரும் நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்; தன் பெயரைப்பெற்ற
மடந்தை துன்பமுறுவாளாயின் அதனைப் போக்குதற்கு அத்தெய்வம் வருதலுங் கூடுமோவென்று
யானும் அஞ்சாநின்றேன்,'' என்று சொல்லிப் பரவி, ''நன்மனம் பெற்ற நாடகக்
கணிகையை என் மனைக்குப் போதருமாறு கட்டளையிடுக,'' என்று கேட்ப, இராசமாதேவி,
''கள்ளும் பொய்யுங் காமமும் கொலையும், உள்ளக் களவு மென் றுரவோர் துறந்தவை''
ஆகும்; அவற்றையே கைக்கொண்ட