பக்கம் எண் :

பக்கம் எண் :343

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை





5





10





15




20





25





30




மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொன்முது கணிகைதன் சூழ்ச்சியிற் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோ னென்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி
மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக்

காவலன் றேவி காற்கீழ் வீழ்ந்தாங்கு
அரவே ரல்கு லருந்தவ மடவார்
உரவோற் களித்த வொருபத் தொருவரும்
ஆயிரங் கண்ணோ னவிநயம் வழூஉக்கொள
மாயிரு ஞாலத்துத் தோன்றிய வைவரும்

ஆங்கவன் புதல்வனோ டருந்தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பி னொருநூற்று நால்வரும்
திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் றன்முன்
உருப்பசி முனிந்த வென்குலத் தொருத்தியும்
ஒன்று கடைநின்ற வாறிரு பதின்மரித்

தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாண்முதல்
யானுறு துன்ப மியாவரும் பட்டிலர்
மாபெருந் தேவி மாதர் யாரினும்
பூவிலை யீத்தவன் பொன்றின னென்று
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும்

பரந்துபடு மனைதொறும் பாத்திர மேந்தி
அரங்கக் கூத்திசென் றையங் கொண்டதும்
நகுத லல்லது நாடகக் கணிகையர்
தகுதி யென்னார் தன்மை யன்மையின்
மன்னவன் மகனே யன்றியு மாதரால்

இந்நக ருறூஉ மிதுக்கணு முண்டால்
உம்பளந் தழீஇய வுயர்மண னெடுங்கோட்டுப்
பொங்குதிரை யுலாவும் புன்னையங் கானல்
கிளர்மணி நெடுமுடிக் கிள்ள முன்னா
இளவேனி லிறுப்ப விறும்பூது சான்ற

பூநாறு சோலை யாருமி லொருசிறைத்
தானோ தமிய ளொருத்தி தோன்ற
இன்ன ளார்கொ லீங்கிவ ளென்று
மன்னவ னறியான் மயக்க மெய்தாக்