பக்கம் எண் :

பக்கம் எண் :344

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை

35





40





45






50





55





60





65



கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்
உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்
உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்
பயிலிதழ்க் கமலமும் பருவத் தலர்ந்த
மலர்வா யம்பின் வாசங் கமழப்

பலர்புறங் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப
ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்
பொருவரு பூங்கொடி போயின வந்நாள்
யாங்கொளித் தனளவ் விளங்கொடி யென்றே
வேந்தரை யட்டோன் மெல்லியற் றேர்வுழி

நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்
சலத்திற் றிரியுமோர் சாரணன் றோன்ற
மன்னவ னவனை வணங்கி முன்னின்றுl
என்னுயி ரனையா ளீங்கொளித் தாளுளள்
அன்னா ளொருத்தியைக் கண்டிரொ வடிகள்

சொல்லுமி னென்று தொழவவ னுரைப்பான்
கண்டிலே னாயினுங் காரிகை தன்னைப்
பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கின் றாள்பவன்
வாகை வேலோன் வளைவணன் றேவி

வாச மயிலை வயிற்றுட் டோன்றிய
பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள்
இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக்
கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்
ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது

பூங்கொடி வாராள் புலம்ப லிதுகேள்
தீவகச் சாந்தி செய்யா நாளுன்
காவன் மாநகர் கடல்வயிறு புகூஉம்
மணிமே கலைதன் வாய்மொழி யாலது
தணியா திந்திர சாபமுண் டாகலின்

ஆங்குப்பதி யழிதலு மீங்குப்பதி கெடுதலும்
வேந்தரை யட்டோய் மெய்யெனக் கொண்டிக்
காசின் மாநகர் கடல்வயிறு புகாமல்.