முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :345
Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை
70
75
80
85
90
95
100
வாசவன் விழாக்கோள் மறவே லென்று
மாதவன் போயின வந்நாட் டொட்டுமிக்
காவன் மாநகர் கலக்கொழி யாதால்
தன்பெயர் மடந்தை துயருறு மாயின்
மன்பெருந் தெய்வம் வருதலு முண்டென
அஞ்சினே னரசன் றேவியென் றேத்தி
நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை
என்மனைத் தருகென விராசமா தேவி
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை
புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்
என்னோ டிருக்குமென் றீங்கிவை சொல்வுழிl
மணிமே கலைதிற மாதவி கேட்டுத்
துணிகயந் துகள்படத் துளங்கிய வதுபோல்
தெளியாச் சிந்தையள் சுதமதிக் குரைத்து
வளியெறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி
அறவண ரடிவீழ்ந் தாங்கவர் தம்முடன்
மறவேன் மன்னவன் றேவிதன் பால்வரத்
தேவியு மாயமுஞ் சித்திரா பதியும்
மாதவி மகளு மாதவர்க் காண்டலும்
எழுந்தெதிர் சென்றாங் கிணைவளைக் கையால
தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க
அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும்
இணைவளை நல்லாள் இராசமா தேவி
அருந்தவர்க் கமைந்த வாசனங் காட்டித்
திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின்
யாண்டுபல புக்கநும் மிணையடி வருந்தவென்
காண்டகு நல்வினை நும்மையீங் கழைத்தது
நாத்தொலை வில்லா யாயினுந் தளர்ந்து
மூத்தவிவ் யாக்கை வாழ்கபல் லாண்டெனத்
தேவி கேளாய் செய்தவ யாக்கையின்
மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்