பக்கம் எண் :

பக்கம் எண் :346

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை



105





110





115





120





125





130






135

பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார
இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்
பேதைமை செய்கை யுணர்வே யருவுரு

வாயி லூறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றென வகுத்த இயல்பீ ராறும்
பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர
 அறியா ராயி னாழ்நர கறிகுவர்

பேதைமை யென்ப தியாதென வினவின்
ஓதிய விவற்றை யுணராது மயங்கி
இயற்படு பொருளாற் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்
உலக மூன்றினு முயிரா முலகம்

அலகில பல்லுயி ரறுவகைத் தாகும்
மக்களுந் தேவரும் பிரமரும் நரகருந்
தொக்க விலகும் பேயு மென்றே
நல்வினை தீவினை யென்றிரு வகையால
 சொல்லப் பட்ட கருவினுட் டோன்றி

வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு
மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டும்
தீவினை யென்ப தியாதென வினவின்
ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய்
கொலையே களவே காமத் தவிழைவு

உலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று
உள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப்

பத்து வகையாற் பயன்றெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவ ராயின்
விலங்கும் பேயு நரகரு மாகிக்
கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர்
நல்வினை யென்ப தியாதென வினவில்
சொல்லிய பத்தின் றொகுதியினீங்கிச்