பக்கம் எண் :

பக்கம் எண் :347

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை




140





145





150





155





160





165





170

சீலந் தாங்கித் தானந் தலைநின்று
மேலென வகுத்த வொருமூன்று திறத்துத
தேவரு மக்களும் பிரமரு மாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர

அரசன் றேவியொ டாயிழை நல்லீர்
புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின்
மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ
பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக்
கித்திறம் பலவு மிவற்றின் பகுதியும்

முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல்
என்றவ னெழுதலு மிளங்கொடி யெழுந்து
நன்றறி மாதவ னல்லடி வணங்கித்
தேவியு மாயமுஞ் சித்திரா பதியும்
மாதவர் நன்மொழி மறவா துய்ம்மின்

இந்நகர் மருங்கின்யா னுறைவே னாயின்
மன்னவன் மகற்கிவள் வருங்கூற் றென்குவர்
ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள்
மாசின் மணிபல் லவந்தொழு தேத்தி
வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக்

கெஞ்சா நல்லறம் யாங்கணுஞ் செய்குவல்
எனக்கிட ருண்டென் றிரங்கல் வேண்டா
மனக்கினி யீரென் றவரையும் வணங்கி
வெந்தாறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த
அந்தி மாலை யாயிழை போகி

உலக வறவியு முதியாள் குடிகையும்
இலகொளிக் கந்தமு மேத்தி வலங்கொண்டு
அந்தர மாறாப் பறந்துசென் றாயிழை
இந்திரன் மருமா னிரும்பதிப் புறத்தோர்
பூம்பொழி லகவயி னிழிந்து பொறையுயிர்த்து

ஆங்குவாழ் மாதவ னடியிணை வணங்கி
இந்நகர்ப் போயா திந்நக ராளும்
மன்னவன் யாரென மாதவன் கூறும்
நாக புரமிது நன்னக ராள்வோன்
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்