பக்கம் எண் :

பக்கம் எண் :348

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை





175






1-6.





















ஈங்கிவன் பிறந்த வந்நாட் டொட்டும
ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது
மண்ணு மரனும் வளம்பல தரூஉம்
உண்ணின் றுருக்கு நோயுயிர்க் கில்லெனத்
தகைமலர்த் தாரோன் றன்றிறங் கூறினன்

நகைமலர்ப் பூம்பொழி லருந்தவன் றானென்.

உரை

மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொன்முது கணிகை - அரசன் புதல்வனை வஞ்சனையாற் சேர்த்திய சித்திராபதி, தன் சூழ்ச்சியிற் போயவன் - தனது சூழ்ச்சியாற் சென்ற உதயகுமரன், விஞ்சையன் வாளின் விளந்தோன் என்பது - விஞ்சையனது வாளினால் இறந்தான் என்பதனை, நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி - உள்ளம் நடுங்கக் கேட்டு மிகவருந்தி, மாதவி மகள்தனை வான்சிறை நீக்க - மணிமேகலையைச் சிறையினின்றும் நீக்கும் பொருட்டு, காவலன் தேவி காற்கீழ் வீழ்ந்து - மன்னவன் தேவியின் அடிகளில் வீழ்ந்து பணிந்து; மணிமேகலையின் தாபதக் கோலத்தை அழித்து அவளை உதயகுமரன் கைப்பற்றி நுகருமாறு செய்வேன் என வஞ்சினங் கூறி வந்து அவனை அவள்பாற் செலுத்தினவள் ஆகலின், மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த கணிகை எனச் சித்திராபதியைக் கூறினார். தொல்முது : ஒருபொருட் பன்மொழி. 7-18. அரவு ஏர் அல்குல் அருந்தவ மடவார் - பாம்பின் படம் போலும் அழகிய அல்குலையுடைய அரிய தவத்தினையுடைய மடவார், உரவோற்கு அளித்த ஒருபத் தொருவரும் - இந்திரனுக்கு ஈன்ற பதினொருவரும், ஆயிரங் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள - இந்திரன்முன் அவிநயம் வழுவினமையால், மாயிரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் - புவியிடைத் தோன்றிய ஐவரும, ஆங்கவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த - இந்திரன் புதல்வனாகிய சயந்தனோடு அரிய தவத்தினையுடைய அகத்தியனால் முனியப்பட்ட, ஓங்கிய சிறப்பின் ஒரு நூற்று நால்வரும் - மிக்க சிறப்பினையுடைய நூற்றுநால்வரும், திருக்கிளர் மணி முடித்தேவர்கோன் தன் முன் - அழகு விளங்கும் மணிமுடி யணிந்த இந்திரன் முன், உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் முனியப்பட்ட உருப்பசியாகிய என் குலத்து தோன்றிய ஒருத்தியும், ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் - என்ற நூற்றிருபத்தொருவர், இத் தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள் முதல் - பழமையாகிய பெரிய இந்நகரிலே தோன்றிய நாள் முதலாக, யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் மாபெருந்தேவி மாதர் யாரினும் -