60--5. ஆங்கு
அப் புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள் - அவள் வயிற்றில் தோன்றிய
புதல்வன் வருவானே யன்றி அவள் வாராள், புலம்பல் - அதன் பொருட்டு வருந்தாதே,
இதுகேள் - இதனைக் கேட்பாயாக, தீவகச்சாந்தி செய்யாநாள் உன் காவல் மாநகர்
கடல் வயிறு புகூஉம் - இந்திரவிழவினைச் செய்யாது கைவிட்ட நாளில் நினது
காவலமைந்த பெரிய நகரம் கடல் வயிற்றில் புகும், மணிமேகலை தன் வாய்மொழியால்
அது - அங்ஙனம் கடல்கோள் நிகழ்வதுமணிமேகலா தெய்வத்தின் மெய்ம்மொழியாலாம்,
தணியாது இந்திர சாப முண்டாகலின் - இந்திரனது சாபமும் உண்மையான் அது தவிராது
;
அப் புதல்வன் - அங்ஙனம்
அவள் கருவில் உதித்த புதல்வன். தீவகச் சாந்தி - இந்திர விழா. மணிமேகலை
- மணிமேகலா தெய்வம் அது - நகர் கடலிற் புகுவது. ஆல் என்பதனை அசையாக்கி,
அதுவாய் மொழி என்றுரைத்தலுமாம். இந்திர சாபமும் என உம்மை விரிக்க
66--71. ஆங்குப்
பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்-அவ்வாறு நகரம் அழிவெய்துதலும் இவ்விடத்து
அரசு கேடுறலும், வேந்தரை அட்டோய் மெய்யெனக் கொண்டு-பகை மன்னரை வென்ற
பெரு வேந்தே உண்மை என்று கொண்டு, இக் காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்-குற்றமற்ற
இப் பெருநகரம் கடல் வயிற்றுட் புகா திருக்கும் பொருட்டு, வாசவன் விழாக்கோள்
மறவேல் என்று - இந்திரவிழாக் கொண்டாடுதலை மறவாதே என வுரைத்து, மாதவன்
போயின அந்நாள் தொட்டும் - சாரணன் சென்ற அந் நாள் தொடங்கி, இக்
காவன் மாநகர்க் கலக்கு ஒழியாதால் - காவலமைந்த இப் பெரிய நகரிலுள்ளார்
கலக்கம் நீங்கப்பெறார் ;
ஆங்கு - அந்நாளில் என்றுமாம்.
ஈங்கு: அசையுமாம். மாதவன் போயினன் ; போயின அந்நாள்தொட்டு என வேறு
அறுத்துரைக்க.
72--6. தன்
பெயர் மடந்தை துயருறுமாயின் - தன் பெயரினைக் கொண்ட மணிமேகலை துன்புறுவாளானால்,
மன்பெருந் தெய்வம் வருதலும் உண்டு என-நிலைபெற்ற பெரிய மணிமேகலா தெய்வம்
தோன்றுதலும் உண்டு என்று, அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி-மன்னவன்
மாதேவி! அச்சமுற்றேன் எனத் துதித்து, நன் மனம் பிறந்த நாடகக் கணிகையை
என்மனைத் தருக என - நல்லுள்ளம் தோன்றிய மணிமேகலையை என தில்லத்தின்கண்
தருக என வேண்ட ;
அரசன் தேவி ! அஞ்சினேன்
எனத்துதித்து, நாடகக் கணிகையை என் மனைத் தருக என்று சித்திராபதி கேட்ப
வென்க. நன்மனம் நன்னெறிக்கண் செல்லும் மனம்.
|