கைகளாலும் வணக்கஞ் செய்ய அறிவுண்டாக
என்று ஆங்கவன் கூறலும் - அடிகள் அறிவுண்டாக என வாழ்த்தலும்;
94--100. இணைவனை
நல்லாள் இராசமாதேவி - வளையல் சேர்ந்த கைகளையுடைய அரசன் பெருந்தேவி,
அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி-தவத்தோர்க்கு உரியஆதனத்தைக்காட்டி,
திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் - அவரது திருந்திய அடியினை
விளக்கிச் சிறப்புச் செய்த பின்னர், யாண்டுபல புக்க நும் இணையடி வருந்த
என காண்டகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது - காணுதற்குத்தக்க எனது நல்வினையானது
யாண்டு பல சென்று மூத்த நும் திருவடிகள் வருந்துமாறு நும்மை ஈண்டு அழைத்தது,
நாத்தொலைவு இல்லையாயினும் தளர்ந்து மூத்தது இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு
என - நாமெலிதலில்லையாயினும் தளர்ந்து முதிர்ந்த இவ்வுடம்பு பன்னெடுநாள்
வாழ்வதாக எனத் துதிக்க;
காட்டி அதில் இருக்கச்செய்து எனவும், இணையடி வருந்த வருமாறு அழைத்தது எனவும்
விரித்துரைத்துக் கொள்க. நாத்தொலை வின்மை- சொற் சோர்வின்மை; சொல்வன்மை.
"நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின், உரை மூதாளன்" (12 : 3-4) என முன்னரும்
வந்துளது.
101--4. தேவி
கேளாய் - அரச மாதேவியே கேட்பாயாக, செய்தவ யாக்கையின் மேவினேனாயினும்
வீழ்கதிர்போன்றேன் - தவம் புரியும் உடலிற் பொருந்தினேனாயினும் மறையுங்
கதிரவனைப் போன்றேன், பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார் இறந்தார்
என்கை இயல்பே - உலகின்கட் பிறந்தோ ரனைவரும் பிணி மூப்புற்று இறப்பார்
என்பது இயற்கையே;
தவயாக்கை-தவத்தால் வந்த உடம்பென்றுமாம், இறப்பிற்கு அத்தமிக்கும் ஞாயிற்றை
உவமை கூறுதல் பௌத்த நூன் மரபாதலை, "சாக்கா டென்ப தருவுருத் தன்மை, யாக்கை
வீழ்கதி ரெனமறைந்திடுதல்" (30: 102-3) என, இந் நூலிற் பின் வருதலானு
மறிக. பிணி நோய் - பிணித்துன்பம் என்றும், பிணித்தலையுடைய நோய் என்றும்
உரைத்தலுமாம். உலகில் யாவரும் பிறந்தார் மூத்தார் நோயுற்றார் இறந்தார்
என்று கூறப்படுதல் இயல்பே என்றலுமாம். பிறப்புப் பிணி மூப் பிறப்புக்கள்
உடம்பிற்கு இயற்கை யென்றபடி. இது கேள் - இதனைக் கேட்பாயாக;
105--10. பேதைமை
செயகை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம்
வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பு ஈராறும் - பேதைமை முதல் வினைப்பயன்
ஈறாக இவையென வகுக்கப்பட்ட பன்னிரண்டு இயல்புகளையும் பிறந்தோர் அறியில்
பெரும்பேறு அறிகுவர் - பிறவியெடுத்தோர்
|