பக்கம் எண் :

பக்கம் எண் :355

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை
 

அறிந்திடின் ஒப்பற்ற பெரும் பேற்றினை யறிவர், அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் - அவற்றை அறியாரானால் துன்பம் நிறைந்த நிரயத்தினை யறிவர்;

பேதைமை-அவிச்சை, செய்கை - கன்மம். உணர்வு - விஞ்ஞானம், அருவுரு - நாமரூபம். வாயில் - ஐம்பொறிகளும் உள்ளமும். ஊறு- பொறிபுலன்களின் இயைபு. நுகர்வு-இன்பதுன்ப நுகர்ச்சி. வேட்கை- அவா. பற்று - புலன்களைப் பற்றிக்கொள்ளுதல் - பவம் - கன்மவீட்டம் பயன்றரு முறைப்படி சார்தல். தோற்றம் - கதிகளிற் பிறத்தல். வினைப் பயன் - கன்மபலம். இவற்றைப் பன்னிரு நிதானம் என்பர். இப் பன்னிரண்டின் இயல்புகளையும் இந்நூலின் 30ஆம் காதையால் அறிக. பெரும்பேறு - நிருவாணம் எனப்படும். நரகு அறிகுவர் என்றது அதனில் அழுந்துவர் என்றபடி.

111--4.   பேதைமை என்பது யாது என வினவின் - பேதைமை யெனப்படுவது எத்தகைத்து என வினவினால், ஓதிய இவற்றை உணராது மயங்கி - கூறப்பட்ட இவ்வியல்புகளை யறியாமல் மயங்கி, இயற்படு பொருளால் கண்டது மறந்து - இயற்கையாகத் தோன்றும் பொருள்களால் தான் கண்டதனை மறந்து, முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல் - முயற்கொம்பு உண்டு என்று கேட்டதனைத் தெளிதலாம்;

இவற்றை-இப் பன்னிரண்டினையும். கேட்டது தெளிதல்-கேட்ட தாகிய பொய்யைமெய்யெனத் தெளிதல். பேதைமை என்பது மயங்கிக் கண்டது மறந்து கேட்டது தெளிதல் என்க.

115--22.   உலகம் மூன்றினும் உயிராம் உலகம் அலகில - மூன்றுலகின் கண்ணும் உயிராகிய உலகம் அளவிறந்தனவாம், பல்லுயிர் அறுவகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே - அப் பல வுயிர்களும் மக்கள் தேவர் பிரமர் நரகர் தொகுதியாய விலங்கு பேய் என்று ஆறு வகையினை யுடையவாம், நல்வினை தீவினை என்ற இருவகையால் சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி - நல்வினை தீவினை என்ற இருதிறத்தானும் மேற்கூறிய அறுவகைப்பட்ட கருவினுள்ளே தோன்றி, வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும் - வினைகளானாய பயன் உண்டாகும் பொழுது உயிர்களுக்கு உளத்தில் பேரின்பமும் கவலையும் காட்டும்;

பௌத்தநூல் கூறும் உலகம் முப்பத்தொன்றும் மேல் கீழ் நடு என்னும் மூன்றனுள் அடங்குதலின் ''உலகம் மூன்றினும்'' என்றார். உயிராம் உலகம் - சேதனப் பிரபஞ்சம் என்றபடி. பல்லுயிர் - அள விறந்த உயிர். அப் பல்லுயிரும் என்று அறுவகைத்தாகு மென்க. செய்கை கூறத் தொடங்கினவர் அதற்கு அங்கமாக உயிர்களை முதலிற்