பக்கம் எண் :

பக்கம் எண் :357

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை
 

பத்துமாம் என்பர். தானம் தலை நின்று என்புழித் தலைநின்று என்னும் எச்சத்தைத் தலைநிற்றல் எனத் திரித்தும், அங்ஙனம் நிற்போர் என விரித்தும் உரைக்க. நல்வினை என்பது நீங்கித் தாங்கி நிற்றல் என்க. மகிழ்ச்சிவினை-நல்வினை. செய்கையை நல்வினை தீவினை எனப் பாகுபாடு செய்தவர் பின் அவற்றி னியல்பை எதிர் நிரனிறை வகையால் விளக்கின ரென்க. "பேதைமை செய்கை" என்பது முதல் ஈண்டுக் கூறப்பட்ட முப்பத்தைந்து அடிகளும் இந்நூலின் 30ஆம் காதையில் இவ்வாறே வந்துள்ளமை அறியற்பாலது.

141--7.   அரசன் தேவியோடு ஆயிழை நல்லீர் - இராசமாதேவியுடனிருக்கின்ற மங்கைமீர், புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் - குற்றமற்ற அருளறத்தினைப் போற்றிக் கேட்பீராக, மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ - மணிமேகலை! மறுபிறப்பினை யறிந்த நீ, பிறவறங் கேட்ட பின்னாள் - பிறசமய அறங்களைக் கேட்ட பின்னர், வந்து உனக்கு - உன்பால் வந்து, இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும் - இவ்வறநெறிகள் பலவற்றையும் இவற்றின் பகுதிகளையும், முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல் - முத்துப்போலும் பற்களையுடையாய் முற்படக் கூறுவேன், என்று அவன் எழுதலும் - என்று கூறி அறவண முனிவன் எழுந்தவளவில்;

ஆயிழை நல்லீர் என்றது மாதவியையும் சுதமதியையும் ஆயத்தையும், அரசன் றேவியையும் விளித்தலுமாம். மாதவி முதலியோரை நோக்கிப் போற்றிக் கேண்மின் என்றுரைத்துப் பின் மணிமேகலையை நோக்கிப் பின்னான் வந்து முன்னுறக் கூறுவல் என்றுரைத்து எழுந்தனன் என்க.

147--58.   இளங்கொடி எழுந்து நன்று அறி மாதவன் நல்லடி வணங்கி - மணிமேகலை எழுந்து நன்னெறிகளை யுணர்ந்த பெருந்தவன் திருந்தடிகளை வணக்கஞ்செய்து, தேவியும் ஆயமும் சித்திராபதியும் -பெருந்தேவியும் ஆயத்தினரும் சித்திராபதியும், மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின் - அறவணவடிகளின் அறமொழிகளை மறவாமல் உய்ப்பீராக, இந்நகர் மருங்கின் யான் உறைவேனாயின் - யான் இந்நகரத்தின்கண் தங்குவேனானால், மன்னவன் மகற்கு இவள் வருங் கூற்று என்குவர் - ஊரோர் இவள் அரசன் புதல்வனுக்குக் கூற்றாய் வந்தவள் என்று கூறுவர்; ஆகலின், ஆபுத்திரன் நாடு அடைந்து அதற்பின்னாள் - யான் ஆபுத்திரனது நாட்டை அடைந்து அதன் பின்னர், மாசில் மணி பல்லவம் தொழுது ஏத்தி-குற்றமற்ற மணிபல்லவத்தை வணங்கித்துதித்து, வஞ்சியுள் புக்கு மாபத்தினி தனக்கு எஞ்சா நல்லறம் யாங்கணும் செய்குவல் - வஞ்சி நகரத்துட் சென்று பத்தினித் தேவியாகிய கண்ணகியின் பொருட்டுக் குறைவில்லாத நல்லறத்தை எவ்விடத்தும் இயற்றுவேன், எனக்கு இடர் உண்டு என்று இரங்கல்