பக்கம் எண் :

பக்கம் எண் :358

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை
 

வேண்டா - எனக்கு இன்னல் உண்டாகும் என்று நீவிர் வருந்தல் வேண்டா, மனக்கினியீர் என்று அவரையும் வணங்கி - உளத்திற் கினிமையுடையீர் என்று அவர்களையும் பணிந்து;

மாதவியையும் சுதமதியையும் ஆயம் என அடக்கி, தேவியும் ஆயமும் சித்திராபதியும் என்றாள். தேவி முதலியன முன்னிலையிற் படர்க்கை. உய்த்தல்-கொண்டு செலுத்தல். மனக்கு: அத்துச்சாரியை தொக்கது. அவரையும் - தேவி முதலியோரையும்; உம்மை இறந்தது தழுவியது.

156--68.   வெந்து ஆறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி-வெந்து ஆறியபொன்னைப்போல் வீழ்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு மறைந்த அந்திப்பொழுதில் மணிமேகலை அங்கு நின்றுஞ் சென்று, உலக வறவியும் முதியாள் குடிகையும் - உலக வறவியையும் சம்பாபதி கோயிலையும், இலகொளிக் கந்தமும் ஏத்தி வலங்கொண்டு - விளங்குகின்ற ஒளியினையுடைய கந்திற் பாவையையும் துதித்து வலங்கொண்டு, அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆயிழை-இளங்கொடி விசும்பேவழியாகப் பறந்துசென்று, இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்து-இந்திரன் வழித்தோன்ற லாகிய புண்ணியராசனது பெரிய நகரத்தின். புறத்தில், ஓர் பூம் பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து - ஒரு பூஞ்சோலை யின் உள்ளிடத்தில் இறங்கி இளைப்பாறி, ஆங்கு வாழ் மாதவன் அடியிணை வணங்கி - ஆண்டுறையும் அருந்தவனாகிய தருமசாவகன் திருவடிகளை வணக்கஞ் செய்து, இந்நகர்ப் பேர் யாது இந்நகர் ஆளும் மன்னவன் யார் என - இந் நகரத்தின் பெயர் யாது இப் பதியை ஆளும் அரசன் யாவன் என வினவ ;

அந்திப்பொழுதின் செக்கர் வானத்திற்குத் தீயில் வெந்து ஆறிய பொன் உவமம்; 1 "வெந்தாறு பொன்னி னந்தி பூப்ப" என்பதுங் காண்க. மருமான் - வழித்தோன்றல்.

168-76.   மாதவன் கூறும்-அருந்தவனுரைப்பான், நாகபுரம் இது- இந்நகரத்தின் பெயர் நாகபுரம், நன்னகர் ஆள்வோன் - இந் நற்பதியை ஆள்வோன், பூமிசந்திரன் மகன் புன்னியராசன் - பூமி சந்திரன் புதல்வனாகிய புண்ணியராசன் என்போன், ஈங்கு இவன் பிறந்த அந்நாள்தொட்டு-இங்கு இவன் பிறந்த அந்நாள்தொடங்கி, ஓங்குயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது - மிகவுயர்ந்த விசும்பின் மழை பிழைத்தலை யறியாது, மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்-பூமியும் மரங்களும் பல வளங்களையும் அளிக்கும், உள்நின்று உருக்கும் நோய் உயிர்க்குஇல்என-உயிர்கட்கு உள்ளே நின்று உருக்குகின்ற பிணிகள் இல்லை என்று, தகை மலர்த்


1 அகம்: 71.