பக்கம் எண் :

பக்கம் எண் :359

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை
 

தாரோன் தன் திறம் கூறினன் நகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன்தான் என்க-கட்டப்பட்ட மலர் மாலையினையுடைய அரசனது வரலாற்றினை ஒளி பொருந்திய மலர்களையுடைய பூஞ்சோலையின்க ணிருந்த பெருந்தவன் மொழிந்தனன்.

தகை - கட்டிய. அகை மலர் எனப் பிரித்து, மலர்ந்த மலர் என்றலுமாம்.

தொன்முது கணிகை கேட்டு வருந்தி வீழ்ந்து, "நகர் கலக்கொழி யாது; அஞ்சினேன்" என்று ஏத்தி, "கணிகையை என்மனைத் தருக" என, இராசமாதேவி ஈங்கிவை சொல்வுழி, மாதவி அறவணவடிகளுடன் வர, காண்டலும், எதிர் சென்று துணையடி வணங்க, அவன் ''அறிவுண்டாக'' என்று கூறலும், இராசமாதேவி காட்டி விளக்கிச் செய்தபின், ''வாழ்க'' என, ''தேவி கேளாய்; நல்லீர் கேண்மின்; மணிமேகலை, முன்னுறக் கூறுவல்'' என்று அவனெழுதலும், இளங்கொடி எழுந்துவணங்கி நின்று வணங்கிப் போகி ஏத்தி வலங்கொண்டு சென்று இழிந்து பொறையுயிர்த்து வணங்கி, "யாது? யார்?" என, மாதவன் கூறும்; அங்ஙனம் கூறும் அருந்தவன் கூறினன் என, வினை முடிவு செய்க.

ஆபுத்திரனாடு அடைந்த காதை முற்றிற்று.