பக்கம் எண் :

பக்கம் எண் :360

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை

[அப்பொழுது புண்ணியராசன் தன் பெருந்தேவியொடு அப் பொழிலிற் புகுந்து, ஆங்குள்ள தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கி, அறன் மறன் அநித்தம்நித்தம் முதலியவற்றைக் கேட்டுப் பின்பு, ''''போழகினளாய்க் கையிற் பாத்திரங்கொண்டு அறங்கேட்கும் இவள் யார்?'''' என வினாவ, அருகே நின்ற கஞ்சுகன் அரசனை வணங்கி, ''''இவளை ஒப்பவர் யாருமில்லை; முன்னொரு காலத்தில் கிள்ளி வளவனோடு நட்புக்கொள்ளுதலை விரும்பிக் காவிரிப்பூம் பட்டினத்திற் குச் சென்ற பொழுது ஆங்குள்ள அறவணவடிகள் இவள் வரலாறுகளை யெல்லாம் கூறினார் என முன்னரே நான் உரைத்துளேன் ; அந் நங்கையே இவள்,'''' என்று கூறினன். கூறலும், மணிமேகலை அரசனை நோக்கி, ''''நின் கையிலிருந்து பாத்திரமே என் கையை அடைந்தது ; செல்வத்தால் மயங்கினை போலும்; நீ முற்பிறப்பை அறிந்திலையாயினும் ஆவின் வயிற்றிற் பிறந்த இப்பிறப்பையாவது அறிந்திலையே ! என் செய்தனை? மணிபல்லவம் சென்று, புத்த பீடிகையைத் திரித்தாலன்றி உனது பிறப்பின் இயல்பை அறியாய் ; ஆதலால் ஆங்கு வருவாயாக,'''' என்று கூறிவிட்டு, வானிலே எழுந்து சென்று, ஞாயிறு குடதிசையில் வீழ்தற்கு முன்பு மணிபல்லவத்தில் இறங்கி, வலங்கொண்டு புத்த பீடிகையைத் தரிசித்தாள். அது பழம் பிறப்பை அவளுக்கு உணர்த் தியது அதனை யறிந்து கண்டு, காயங்கரை யென்னும் ஆற்றின் கரை யில் பிரமதருமன் என்னும் முனிவன் உரைத்ததை எண்ணி வியந்து, அவள் அங்கிருக்கப், புண்ணியராசன் அப்பொழிலை விட்டு நகரிற் புகுந்து தன்னை வளர்த்த அன்னையாகிய அமரசுந்தரியை வினவித் தன் வரலாறு முழுவதையும் அவள் கூறக்கேட்டு வருந்தி அரசாட்சியில் வெறுப்புற்றுத் துறத்தற்குத் துணிந்து தன் கருத்தைவெளியிட்டனன். அதனைக்கேட்ட சனமித்திரன் என்னும் அமைச்சன் அவனை வணங்கி, ''''அரசே, பூமிசந்திரன் நின்னைப் பெறுவதன்முன் இந்நாட்டில் பன்னீராண்டு மழைவளம் கரந்து வறுமை மிக்கது ; அதனால் எல்லா உயிர்களும் வருந்தின ; அப்பொழுது காய்கின்ற கோடையில் கார் தோன் றியது போல, நீ தோன்றினை ; தோன்றியபின் இந்நாட்டில் வானம் பொய்யாது; மண் வளம் குறையாது ; உயிர்கள் உறுபசி அறியா; இனி நீ நீங்குவாயாயின், உயிர்கெளெல்லாம் தாயைப்பிரிந்த குழவிபோலக் கூவாநிற்கும். இத்தகைய உலகத்தைக் காவாமல் உனது பயனையே விரும்பிச் செல்லுதல் தகுதியன்று. புத்ததேவன் அருளிய அறமும் ஈதன்று'''' என்று கூற, அரசன் கேட்டு, ''''மணிபல்லவத்தை வலங்கொள்ள வேண்டும் என எனக்குண்டாய வேட்கை தணித்தற்கரியது ; ஆதலின் ஒரு திங்கள் அளவு இந்நகரைப் பாதுகாத்தல் நினது கடன்,'''' என்று கூறிப் புறப்பட்டு, நாவாய்ஏறி மணிபல்லவத்தை அடைந்தான். உடனே மணிமேகலை வந்து அழைத்துச் சென்று அவனோடு அத்தீவை வலம் வந்து, ''''பழம்பிறப்பை உணர்விக்கும் தருமபீடிகை இது,''''