என்று காட்ட, அரசன் அதனைத்
தரிசித்து வலங்கொண்டு ஏத்தினன். அப்பீடிகை பழம்பிறப்பின் செய்தியை
அவனுக்கு விளங்கத் தெரிவித்தது. அதனை யறிந்து வியப்புற்றுத் தனக்குப் பழம்பிறப்பில்
அமுத சுரபி யென்னும் பாத்திரத்தை யளித்த சிந்தாதேவியை நினைந்து, "தென்றமிழ்
மதுரைச் செழுங்கலைப் பாவாய், உணர்விலே தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்
மடந்தையே, நான் பிறந்தபிறவிதோறும் நின்னை வழிபடுதலின்றி மறந்து வாழேன்,"
என்று துதித்து மணிமேகலையோடும் எழுந்து தென்மேற்கிற் சென்று கோமுகிக் கரையில்
ஒரு புன்னைமரத்தின் நிழலிலே இருந்தான், இருக்கும்பொழுது, ஆபுத்திரனோடு மணிமேகலை
வந்திருத்தலைக் காவற்றெய்வமாகிய தீவ திலகை அறிந்து வந்து, "ஆருயிர் மருந்தினைக்
கையில் ஏந்தி உயிர்களின் பெருந்துயரினைப் போக்கிய பெரியோய்! அக்காலத்தில்
மறந்து இத் தீவில் நின்னைத் தனியே விட்டுக் கப்பலேறிச் சென்ற பின்பு
நின்னை நினைந்து மீண்டு வந்து நீ இங்கு இறந்திருத்தலை யறிந்து உடனே தம்
முயிரை நீத்த ஒன்பது செட்டிகளின் உடல் என்புகள் இவைகாண்; அவர்கள் உண்பிக்க
உண்டு உடன் வந்தோர்கள், அவர்கள் இறந்தது தெரிந்து தாங்களும் இறந்தார்கள்
; அவர்களுடைய என்புகள் இவை காண்; அலைகள் தொகுத்த மணலால் மூடப்பட்டுப்
புன்னை நிழலின் கீழே உனது பண்டை உடம்பு இருந்ததனைக் காண்," என்று அரசனை
நோக்கிக் கூறி, பின்பு மணிமேகலையைப் பார்த்து, "காவிரிப்பூம் பட்டினத்தைக்
கடல் கொண்டது. அதற்குக் காரணம் கேட்பாயாக ; நாக நாட்டரசன் மகளாகிய
பீலிவளை என்பவள் தான் பெற்ற குழந்தையுடன் வந்து இத்தீவையும் புத்த பீடிகையையும்
வலம் வந்து துதிக்கும் பொழுது கம்பளச் செட்டியின் கப்பல் வந்து தங்க, பீலிவளை
அவனிடஞ்சென்று, "இவன் அரசன் புதல்வன்; இவனை அவனிடம் சேர்ப்பாயாக,"
என்று சொல்லிக் குழந்தையை அவன் கையிற் கொடுக்க, அவன் பெருமகிழ்ச்சியடைந்து
வாங்கி மரக்கலம் ஏறிச்செல்லுகையில் கலம் உடைந்து போயிற்று; போகவே,
அதில் இருந்தோரிற் சிலர் மெல்லப் பிழைத்துச் சென்று காவிரிப்பூம் பட்டினத்தை
யடைந்து, புதல்வனைக் கெடுத்த செய்தியை அரசனுக்குத் தெரிவித்தனர். அது கேட்டு
அவன் பொறாமல் செயவற்றுக் கடற்கரையை அடைந்து மகனைத் தேடித்திரிந்தமையால்
நகரிலே இந்திரனுக்கு விழாச்செய்தல் நின்றுவிட்டது. அதனைப் பொறுக்காமல்
மணிமேகலா தெய்வம் ''இந் நகரைக் கடல் கொள்ளுக,'' என்று சபிக்க, கடல்
நகரை மூடியது; மூடவே, அரசன் வேறிடஞ் சென்றான். அறவணவடிகளோடு மாதவியும்
சுதமதியும் யாதொரு வருத்தமும் இன்றிப் போய் வஞ்சி நகரம் புகுந்தனர்,"
என்று சொல்லிப் போயினள். அவள் போன பின்பு புண்ணியராசன் அவ்விடத்தே
மணலைத் தோண்டி, அங்கே தோன்றிய தனது பழைய உடம்பின் என்பைக் கண்டு மயக்கமுற்றான்.
அதைக் கண்ட மணிமேகலை, "நீ என்ன துன்பமுற்றாய்? யான் நின் நாட்டிற்கு
|