வந்து நின்னை ஈங்கு அழைத்து
வந்தது நினக்கு முற்பிறப்பை உணர்த்தி, யாண்டும் நின் பெயரை நிலைநிறுத்துற்
பொருட்டேயாகும். உலகத்தை ஆளும் அரசர் தாமே அருளறத்தை மேற்கொண்டால்
உலகில் குற்றமெல்லாம் அற்றுவிடுமன்றோ? அறமெனப்படுவது யாதெனில் உயிர்களுக்கு
உணவையும் உடையையும் உறையுளையும் வழங்குவதே; இதனை யன்றி வேறு இல்லை," என்று
சொல்லித்தேற்றினாள். அதனைக் கேட்ட அரசன், "எனது நாட்டிலும் பிறர்நாட்டிலும்
நீ கூறிய நல்லறத்தைச் செய்வேன் : நீ என் பிறப்பை உணர்த்தினை, யான்
நின்னிடத்தினின்றும் பிரிதல் ஆற்றேனாகின்றேன்," என, மணிமேகலை, "நீ
வருந்தற்க :நீ இங்கே போந்ததற்கு வருந்தி நின்னாடுநின்னை யழைக்கும். ஆதலின்
மரக்கலம் ஏறி நீ நின்னாட்டிற்குச் செல்லுக ; யான் வஞ்சி நகரத்திற்குச்
செல்வேன்," என்று கூறி விசும்பில் எழுந்தான்.]
|