பக்கம் எண் :

பக்கம் எண் :363

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை



25





30





35





40





45





50





55

றிப்பிறப் பறிந்திலை யென்செய் தனையோ
மணிப்பல் லவம்வலங் கொண்டா லல்லது

பிணிப்புறு பிறவியின் பெற்றியை யறியாள்
ஆங்கு வருவாய் அரசநீ யென்றப்
பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று
மையறு விசும்பின் மடக்கொடி யெழுந்து
வெய்யவன் குடபால் வீழா முன்னர்

வானின் றிழிந்து மறிதிரை யுலாவும்
பூநா றடைகரை யெங்கணும் போகி
மணிப்பல் லவம்வலங் கொண்டு மடக்கொடி
பிணிப்பறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழிதுவலங் கொள்ளவத் தூமணிப் பீடிகைப்

பழுதில் காட்சி தன்பிறப் புணர்த்தக்
காயங் கரையெனும் பேரியாற் றடைகரை
மாயமின் மாதவன் றன்னடி பணிந்து
தருமங் கேட்டுத் தாள்தொழு தேத்திப்
பெருமகன் றன்னொடும் பெயர்வோர்க் கெல்லாம்

விலங்கு நரகரும் பேய்களு மாக்கும்
கலங்கஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரு மக்களும் பிரமரு மாகுதிர்
ஆகலி னல்வினை யயரா தோம்புமின்
புலவன் முழுதும் பொய்யின் றுணர்ந்தோன்

உலகுயக் கோடற் கொருவன் றோன்றும்
அந்நா ளவனறங் கேட்டோ ரல்லது
இன்னாப் பிறவி யிழுக்குந் ரில்லை
மாற்றாருங் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமி னறமெனச் சாற்றிக் காட்டி

நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்தீர்
அவ்வுரை கேட்டுநும் மடிதொழு தேத்த
வெவ்வுரை யெங்கட்கு விளம்பினி ராதலின்
பெரியவன் றோன்று முன்னரிப் பீடிகை
கரியவ னிட்ட காரணந் தானு

மன்பெரும் பீடிகை மாய்ந்துயிர் நீங்கிய
என்பிறப் புணர்த்தலு மென்னென் றியான்தொழ
முற்ற வுணர்ந்த முதல்வனை யல்லது