முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :364
Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
60
65
70
75
80
85
90
மற்றப் பீடீகை தன்மிசைப் பொறாஅது
பீடிகை பொறுத்த பின்ன ரல்லது
வானவன் வணங்கான் மற்றவ் வானவன்
பெருமகற் கமைத்துப் பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக வென்றே
அருளின னாதலி னாயிழை பிறவியும்
இருளறக் காட்டு மென்றெடுத் துரைத்தது
அன்றே போன்ற தருந்தவர் வாய்மொழி
இன்றெனக் கென்றே யேத்தி வலங்கொண்டு
ஈங்கிவ றின்னண மாக விறைவனும்
ஆங்கப் பொழில்விட் டகநகர் புக்குத்
தந்தை முனியாத் தாய்பசு வாக
வந்த பிறவியு மாமுனி யருளால்
குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர்
அடர்ப்பொன் முட்டையு ளடங்கிய வண்ணமும்
மாமுனி யருளான் மக்களை யில்லோன்
பூமிசந் திரன்கொடு போந்த வண்ணமும்
ஆய்தொடி யரிவை யமரசுந் தரியெனும்
தாய்வாய்க் கேட்டுத் தாழ்துய ரெய்தி
இறந்த பிறவியின் யாய்செய் ததூஉம
பிறந்த பிறவியின் பெற்றியு நினைந்து
செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க
அரைசுவீற் றிருந்து புரையோர்ப் பேணி
நாடகங் கண்டு பாடற் பான்மையில்
கேள்வி யின்னிசை கேட்டுத் தேவியர்
ஊடற் செவ்வி பார்த்துநீ டாது
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து
தேமரு கொங்கையிற் குங்கும மெழுதி
அங்கையிற் றுறுமலர் சுரிகுழற் சூட்டி
நறுமுகை யமிழ்துறூஉந் திருநகை யருந்தி
மதிமுகக் கருங்கட் செங்கடை கலக்கக்
கருப்பு வில்லி யருப்புக்கணை தூவத்
தருக்கிய காமக் கள்ளாட் டிகழ்ந்து
தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித்
தெளிந்த நாதனென் செவிமுத லிட்டவித
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்