95
100
105
110
115
120
125
|
தேத மின்றா யின்று விளைந்தது
மணிமே கலைதான் காரண மாகவென்
றணிமணி நீண்முடி யரசன் கூற
மனம்வே றாயினன் மன்னென மந்திரி
சனமித் திரனவன் தாள்தொழு தேத்தி
எங்கோ வாழி யென்சொற் கேண்மதி
நுங்கோ னுன்னைப் பெறுவதன் முன்னாள்
பன்னீ ராண்டிப் பதிகெழு நன்னாடு
மன்னுயிர் மடிய மழைவளங் கரந்தீங்
கீன்றாள் குழவிக் கிரங்கா ளாகித்
தான்றனி தின்னுந் தகைமைய தாயது
காய்வெங் கோடையிற் கார்தோன் றியதென
நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல்
தோன்றிய பின்னர்த் தோன்றிய வுயிர்கட்கு
வானம் பொய்யாது மண்வளம் பிழையாது
ஊனுடை யுயிர்க ளுறுபசி யறியா
நீயொழி காலை நின்னா டெல்லாம்
தாயொழி குழவி போலக் கூஉம்
துயர்நிலை யுலகங் காத்த லின்றிநீ
உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின்
இறுதி யுயிர்க ளெய்தவு மிறைவ
பெறுதி விரும்பினை யாகுவை யன்றே
தன்னுயிர்க் கிரங்கான் பிறவு யிரோம்பு
மன்னுயிர் முதல்வ னறமுமீ தன்றால்
மதிமா றோர்ந்தனை மன்னவ வென்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
மணிபல் லவம்வலங் கொள்வதற் கெழுந்த
தணியா வேட்கை தணித்தற் கரிதால்
அரசு முரிமையு மகநகர்ச் சுற்றமும்
ஒருமதி யெல்லை காத்தனின் கடனெனக்
கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்
இலங்குநீர்ப் புணரி யெறிகரை யெய்திl
வங்க மேறினன் மணிபல் லவத்திடைத்
தங்கா தக்கலஞ் சென்றுசார்ந் திறுத்தலும்
புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி
|