பக்கம் எண் :

பக்கம் எண் :367

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை


165





170





175





180





185





190





195

நின்குறி யிருந்து தம்முயிர் நீத்தோர
ஒன்பது செட்டிக ளுடலென் பிவைகாண்

ஆங்கவ ரிடவுண் டவருடன் வந்தோர்
ஏங்கிமெய் வைத்தோ ரென்பு மிவைகாண்
ஊர்திரை தொகுத்த வுயர்மணல் புதைப்ப
ஆய்மலர்ப் புன்னை யணிநிழற் கீழால்
அன்புடை யாருயி ரரசற் கருளிய

என்புடை யாக்கை யிருந்தது காணாய்
நின்னுயிர் கொன்றாய் நின்னுயிர்க் கிரங்கிப்
பின்னாள் வந்த பிறருயிர் கொன்றாய்
கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை
பலர்தொழு பாத்திரங் கையி னேந்திய

மடவரல் நல்லாய் நின்றன மாநகர்
கடல்வயிறு புக்கது காரணங் கேளாய்
நாக நன்னா டாள்வோன் றன்மகள்
பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப்பகை வானவன் வழியிற் றோன்றிய

புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தியித்
தீவகம் வலஞ்செய்து தேவர்கோ னிட்ட
மாபெரும் பீடிகை வலங்கொண் டேத்துழிக்
கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப
அங்கவன் பாற்சென் றவன்றிற மறிந்து

கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும்
பெற்ற வுவகையன் பெருமகிழ் வெய்திப்
பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனைக்
தொழுதனன் வாங்கித் துறைபிறக் கொழியக்
கலங்கொண்டு பெயர்ந்த வன்றே காரிருள்

இலங்குநீ ரடைகரை யக்கலங் கெட்டது
கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடிவேற் கிள்ளி மன்னனுக் குரைப்ப
மன்னவன் மகனுக் குற்றது பொறாஅன்
நன்மணி யிழந்த நாகம் போன்று

கானலுங் கடலுங் கரையுந் தேர்வுழி
வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது