200
205
210
215
220
225
230
|
மணிமே கலாதெய்வம் மற்றது பொறாஅள
அணிநகர் தன்னை யலைகடல் கொள்கென
விட்டனள் சாபம் பட்ட தி துவால்
கடவுண் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த
வடிவேற் றடக்கை வானவன் போல
விரிதிரை வந்து வியனகர் விழுங்க
ஒருதனி போயின னுலக மன்னவன்
அருந்தவன் றன்னுட னாயிழை தாயரும்
வருந்தா தேகி வஞ்சியுட் புக்கனர்
பரப்புநீர்ப் பௌவம் பலர்தொழக் காப்போள்
உரைத்தன கேட்க வுருகுவை யாயினின்
மன்னுயிர் முதல்வனை மணிமே கலாதெய்வம்
முன்னா ளெடுத்தது மந்நா ளாங்கவன்
அறவர சாண்டது மறவணன் தன்பால்
மறுபிறம் பாட்டி வஞ்சியுட் கேட்பையென்று
அந்தரத் தீவகத் தருந்தெய்வம் போயபின்
மன்னவ னிரங்கி மணிமே கலையுடன்
துன்னிய தூமண லகழத் தோன்றி
ஊன்பிணி யவிழவு முடலென் பொடுங்கித்
தான்பிணி யவிழாத் தகைமையை தாகி
வெண்சுதை வேய்ந்தவ ணிருக்கையி னிருந்த
பண்புகொள் யாக்கையின் படிவ நோக்கி
மன்னவன் மயங்க மணிமே கலையெழுந்து
என்னுற் றனையோ விலங்கிதழ்த் தாரோய்
நின்னா டடைந்தியான் நின்னையீங் கழைத்தது
மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி
அந்தரத் தீ்வினு மகன்பெருந் தீவினும்
நின்பெயர் நிறுத்த நீணில மாளும்
அரசர் தாமே யருளறம் பூண்டால்
பொருளு முண்டோ பிறபுரை தீர்த்தற்கு
அறமெனப் படுவ தியாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியு முடையு முறையுளு மல்லது
கண்ட தில்லெனக் காவல னுரைக்கும்
என்னாட் டாயினும் பிறர்நாட் டாயினும்
|