25.
ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
|
235
|
நன்னுத லுரைத்த நல்லறஞ் செய்கேன
என்பிறப் புணர்த்தி யென்னைநீ படைத்தனை
நீன்றிறம் நீங்க லாற்றேன் யானெனப்
புன்கண் கொள்ளனீ போந்ததற் கிரங்கிநின்
மன்பெரு நாடு வாயெடுத் தழைக்கும்
வங்கத் தேகுதி வஞ்சியுட் செல்வனென்று
அந்தரத் தெழுந்தன ளணியிழை தானென்.
உரை
|
1--6 |
அரசன் உரிமையோடு
அப் பொழில் புகுந்து - மன்னவன் மனைவியுடன் அச் சோலையின்கட் புக்கு, தருமசாவகன்
தன்னடி வணங்கி-தருமசாவக முனிவரின் திருவடிகளைவணக்கஞ் செய்து, அறனும் மறனும்
அநித்தமும் நித்தத்திறனும் துக்கமும் செல்லுயிர்ப்புக்கிலும்-அறமும் பாவமும்
அநித்தப்பொருளின் வகைகளும் நித்தப்பொருளின் வகைகளும் பிறப்புமுதலாய துக்கமும்
செல்லுகின்ற வுயிர்
புகுமிடமும், சார்பிற்றோற்றமும்சார்பு அறுத்துஉய்தி் - பேதைமை முதலிய பன்னிரண்டின்
தோற்றமும் அவற்றினீங்கி உய்யும் வகையும், ஆரியன் அமைதியுப் அமைவுறக் கேட்டு-
ஆசிரியனாகிய புத்தனின் இயல்பும் அமைதிபெறக் கேட்டு;
|
அரசன் - புண்ணிய ராசன்.
தரும சாவகன் என்பது தருமங் கேட்பவன் என்னும் பொருளது. துக்கம் - பிறப்பு,
பிணி, மூப்பு சாக்காடு என்பன. சார்பிற்றோற்றம் - ஒன்றினொன்று சார்ந்து
தோன்றும் பன்னிரு நிதானம். ஆரியன் - குரவன் ; புத்தன். அரசன் புகுந்து வணங்கிக்
கேட்டு என்க.
|
7--10. |
பெண் இணை இல்லாப்
பெருவனப்பு உற்றாள் - மகளிருள் தனக்கு இணையில்லாத பேரழகுடையளாய், கண்ணிணை
இயக்கமும் காமனோடு இயங்கா - கண்களின் இயங்குதலும் அநங்கனோடு இயங்கா நின்று,
அங்கையிற் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்- அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக்கொண்டு
அறவுரை கேட்கின்ற, இங்கிணை இல்லாள் இவள் யார் என்ன - இணையற்ற இம் மங்கை
யாவள் என வினவ ;
|
கண்ணிணை இயக்கமும்
காமனோடு இயங்கா என்றது இதனைக் கருவியாகக்கொண்டு காமன் போருக்கெழுமாறு இவள்
பார்வையின் இயக்கம் உளதென்றபடி: "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" (5: 6)
என முன் வந்திருப்பதனோடு ஒத்து நோக்கற்பாலது. இனி, இயங்கா என முற்றாக்கி
இயக்கம் தீநெறியிற் சென்றிலது என்றுமாம். அரசன் கேட்டுப் பின்பு இவள் யாரென்ன
வென்க.
.
|
11--8 |
காவலன் தொழுது
கஞ்சுகன் உரைப்போன் - அரசனைப் பணிந்து சட்டையிட்ட பிரதானி உரைக்கின்றவன்,
காவலந்தீவில்
|
|