றும் இறங்கி, மறி திரை உலாவும்-வளைந்த அலைகள் உலாவுகின்ற, பூநாறு அடைகரை எங்கணும் போகி - பூக்கள் மணம் வீசுகின்ற
அடைகையெங்குஞ் சென்று, மணிப்பல்லவம் வலங்கொண்டு - மணிப்பல்லவத்தை வலம்
வந்து, மடக்கொடி பிண்ப்பறு மாதவன் பீடிகை காண்டலும் - மணிமேகலை பற்றற்ற
பெருந்தவனாம் புத்தனது பீடிகையைக் காண்டலும், தொழுது வலங்கொள்ள - வலம்
வந்து வணங்க, அத் தூமணிப் பீடிகை-அவ் வழகிய தூய பீடிகையின், பழுது இல் காட்சி
- குற்றமற்ற காட்சியானது, தன் பிறப்பு உணர்த்த - தனது பிறப்பினை அறிவிக்க;
அடைகரை - அணைந்துள்ள கரை.
மடக்கொடி எழுந்து இழிந்து போகி வலங்கொண்டு காண்டலும், பீடிகைக் காட்சி
உணர்த்த வென்க.
37--44.
காயங்
கரையெனும் பேரியாற்று அடைகரை-காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையிலுள்ள,
மாயம் இல் மாதவன் தன்னடி பணிந்து, வஞ்சனையற்ற பெருந்தவனாகிய பிரமதருமன்
திருவடிகளை வணங்கி, தருமம் கேட்டுத் தாள் தொழுது ஏத்தி- அறங்கேட்டு அடியிணை
பணிந்து துதித்து, பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்-அரசனுடன்
அவந்தி நகரஞ் செல்வோரனைவர்க்கும், விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்-
விலங்கினமும் நிரயவாணரும் பேய்களுமாகத் தோற்றுவிக்கும். கலங்கு அஞர்த்
தீவினை கடிமின் - கலங்குதற்குக் காரணமாகிய துன்பத்தைத் தரும் தீவினைகளை
நீக்குமின், கடிந்தால் - அவற்றை நீக்கினால், தேவரும் மக்களும் பிரமரும்
ஆகுதிர்-வானவரும் மக்களும் பிரமரும் ஆவீர், ஆதலின் நல்வினை அயராது ஓம்புமின்
- ஆதலின் நல்வினைகளை மறவாது பாதுகாத்திடுமின் ;
புத்த சமயத்திற் கூறப்படும் கதி ஆறாகுமென்பதும், அவற்றுள் மூன்று நல்வினையானும்,
மூன்று தீவினையானும் உளவாகும் என்பதும்
1
"அலகில் பல்லுயி ரறுவகைத் தாகும், மக்களும் தேவரும்
பிரமரு நரகரும், தொக்க விலங்கும பேயு மென்றே, நல்வினை தீவினை யென்றிரு
வகையாற், சொல்லப்பட்ட கருவிற் சார்தலும்" என இந்நூலுட் பின்பு கூறப்படுதலா
னறிக. தீவினை - கொலை முதலியன. நல்வினை- கொல்லாமை முதலியன.
45--51
புலவன்
முழுதும் பொய்யின்று உணர்ந்தோன் உலகுஉயக் கோடற்கு ஒருவன் தோன்றும்-பேரறிவுடையோனும் அனைத்தையும் வழுவின்று உணர்ந்தோனுமாகிய ஒருவன் உலகினை உய்யக் கொள்ளுமாறு
உதித்தருள்வன், அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது-அந்நாளிலே அவனுடைய
அறமொழிகளைக் கேட்டோரை,
1
மணி. 30: 56-60.
|