பக்கம் எண் :

பக்கம் எண் :372

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 

யன்றி, இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை-துன்பந்தரும் பிறவியினின்றும் தப்புவோர் எவரும் இல்லை ஆகலின், மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம்-பிறரால் தடுத்தற்கரிய கூற்றுவன் வருவதற்கு முன்னரே, போற்றுமின் அறம் எனச் சாற்றிக்காட்டி-அறம்புரிவீராக என்று விளங்க எடுத்துரைத்து, நா கடிப்பாக வாய்ப்பறை அறைந்தீர்-நாவே குறுந்தடியாக வாயாகிய பறையை அறைந்தீர்: புலவன்-ஞானி புத்தன் என்பதும் இப்பொருட்டு. இனி, புலவன்- இயற்கை யறிவுடையவன் என்றுமாம். உணர்ந்தோன் ஒருவன் தோன்று மென்க. அவன் அறம் - அவன் கூறும் அறம். கூற்றுவன் எதனாலும் தடுத்தற்கரியன் என்பது, 1  "மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்" 2 "மருந்தில் கூற்றத் தருந்தொழில்" எனப் பிற சான்றோர் கூறுமாற்றானு மறிக - அறைந்து சாற்றிக் காட்டினீர் என விகுதி பிரித்துக் கூட்டுக. மாதவன் றன்னடி பணிந்து பெயர்வோர்க்கெல்லாம் வாய்ப்பறை அறைந்தீர் என இடமும் பாலும் மயங்கியுள்ளன; ''மாதவ நின்னடி'' எனப் பாடங் கொள்ளுதல் தக்கது.

52--7.    அவ்வுரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த-அவ்வற மொழிகளைக் கேட்டு யாம் நும் திருவடிகளை வணங்கித் துதிக்க, வெவ்வுரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்-நீர் எங்கட்குத் துன்பந்தரும் மொழிகளைக் கூறியருளினீர் ஆதலின், பெரியவன் தோன்றுமுன்னர் - புத்தன் தோன்றுதற்கு முன்னரே, இப்பீடிகை கரியவன் இட்ட காரணம் தானும்-இப் பீடிகையை இந்திரன் ஈண்டு இட்ட காரணமும், மன்பெரும் பீடிகை - பெருமைமிக்க இப்பீடிகை, மாய்ந்து உயிர் நீங்கிய என் பிறப்பு உணர்த்தலும்-யாக்கையினின்றும் உயிர் நீங்கி மறைந்த எனது முற் பிறப்பினை உணர்த்தற்குக் காரணமும், என் என்று யான் தொழ - என்னையென்று யான் வணங்க; வெவ்வுரை-பதினாறு நாளில் இராகுலன் நச்சுவிழி யரவால் உயிர் துறப்பான், நீ அவனுடன் தீயில் மூழ்குவை என்னும் மொழி. இதனை இந்நூல்க ஆம் காதையா னறிக.

58--68.   முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது - எல்லா மறிந்த இறைவனையன்றி, மற்று அப்பீடிகை தன்மிசைப் பொறாஅது - வேறெவரையும் அப்பீடிகை தன்மீது தாங்காது, பீடிகை பொறுத்தபின்னர் அல்லது-அப்பீடம் அறவோன் அடியிணையைத் தாங்கியபின்னரேயன்றி, வானவன் வணங்கான்-இந்திரன் அதனை வணங்கான், மற்று அவ்வானவன்-அவ்விண்ணவன், பெருமகற்கு. அமைத்து-புத்தனை அறிந்து கொள்ளும்பொருட்டு இயற்றி, பிறந்தார் பிறவியை - பிறந்தோர்களுடைய பழம்பிறப்பின் செய்தியை, தரும பீடிகை சாற்றுக என்றே அருளினன் ஆதலின் - இத் தரும பீடிகை உணர்த்துக என ஆணைதந்தனன் ஆதலின், ஆயிழை பிறவியும்


1 தொல். புறத்திணை. 24. 2 புறம். 3.