நீடாது - அது நீட்டியாவாறு, பாடகத்
தாமரைச் சீறடி பணிந்து- பாடகமணிந்துள்ள தாமரை மலரைப் போன்ற சிறிய அடிகளை
வணங்கி, தேமரு கொங்கையில் குங்குமம் எழுதி-அழகிய கொங்கைகளில் குங்குமக்
குழம்பால் எழுதி, அங்கையில் துறுமலர் சுரிகுழல் சூட்டி - நெருங்கிய மலர்களை
அழகிய கையினால் சுரிந்த கூந்தலின் கண் சூட்டி, நறுமுகை அமிழ்து உறூஉந் திருநகை
அருந்தி-நறிய முகிழ்போலும் அழகிய பற்களிற் பொருந்திய அமிழ்தினையுண்டு,
மதிமுகக் கருங்கண் செங்கடை கலக்க-திங்களனையமுகத்திலுள்ள கரிய கண்களின்
சிவந்த கடை கலக்குறுத்த, கருப்பு வில்லி அருப்புக்கணை தூவ - கரும்பினை வில்லாகக்கொண்ட
காமன் முகையறா மலராகிய அம்புகளைப் பொழிய, தருக்கிய காமக் கள்ளாட்டு
இகழ்ந்து - செருக்குற்ற காமமாகிய கள்ளையுண்டு விளையாடும் விளையாட்டினை இகழ்ந்து,
தூ அறத்துறத்தல் நன்று எனச் சாற்றிபற்றுக்கோடு இல்லையாகத் துறத்தல் நல்லது
எனக் கூறி;
மன்னர் செவ்விபார்த்தலாவது
தம் குறை கூறுதற் கேற்ற மனமொழி மெய்கள் இனியனாங் காலம் பார்த்தல்.
1
"செவ்வி அறம்பார்க்கும்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. புரையோர்
- அறிவில் மேம்பட்ட அமைச்சர் புரோகிதர் முதலாயினர். கேள்வி - சுருதி.
ஊடல்-கலவியின்பம் பற்றிப் புலத்தல்; அஃது அளவிற் பெருகலாகா தென்பதை,
2
"உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது, மிக்கற்றால் நீளவிடல்" என்பதனா
லறிக. ஊடல் நீடாது பணிந்து எழுதிச் சூட்டி யென்க. திரு நகை உறும் அமிழ்து
என மாறுக. உணங்க வீற்றிருந்து கண்டு கேட்டு அருந்தித் தருக்கிய காமக் கள்ளாட்டு
என முடிக்க. துவரத் துறத்தல் என்னும் பாடத்திற்கு முற்றத் துறத்தல் என்று
பொருள் கொள்க.
93--6. தெளிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து-மெய்யுணர்வுடைய தருமசாவக முனிவன் எனது
காதினிடம் விதைத்த வித்தானது. ஏதம் இன்றாய் இன்று விளைந்து மணிமேகலைதான்
காரணமாக என்று - மணிமேகலை காரணமாகக் குற்றமின்றாய் இன்று விளைந்தது என்று,
அணிமணி நீள்முடி அரசன் கூற - தொன்று தொட்டுவந்த அழகிய மணிமுடியினையுடைய
மன்னவன் மொழிய;
நீண்முடி - தொன்று தொட்டு
வந்த முடி; குடியின் பழமையும் பெருமையும் கூறியபடி. அரசன் துயரெய்தி நினைந்து
இகழ்ந்தது சாற்றிக்கூற வென்க.
97--104.
மனம்
வேறாயினன் மன் என மந்திரி சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி - அரசன்
மனம் வேறுபட்டனன் என்று மந்திரயாகிய சனமித்திரன் மன்னவன் அடிகளை வணங்
1
குறள். 130.
2
குறள். 1302.
|