கித் துதித்து, எங்கோ வாழி என்சொல் கேண்மதி - எம்மிறைவனே வாழ்வாயாகஎன்
மொழியினைக் கேள், நுங்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள் - நுந் தந்தையாய
பூமிசந்திரன் நின்னைப் பெறுவதற்கு முன்னர், பன்னீராண்டு இப் பதிகெழு நன்னாடு
மன்னுயிர் மடிய மழைவளம் கரந்து-இந்நகரத்தினையுடைய நல்ல நாடு மிகுதியான உயிர்கள் இறக்குமாறு மழையாகிய செல்வம் பன்னீராண்டு மறைந்தமையால், ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி-பெற்ற தாய் குழந்தைக்கு இரங்காதவளாய், தான் தனி தின்னும் தகைமையதாயது-தானே தனித்து உண்ணுந் தகுதியினை யுடைத்தாயிற்று;
மன் - அரசன். மதி; முன்னிலையசை,
கரந்து -கரந்தமையால் என்க; கரந்து என்பதும் பாடம். நாடு - சாவக நாடு.
105--11.
காய்
வெங் கோடையில் கார் தோன்றியது என - எரிகின்ற வெப்பமிகுந்த கோடையில்
கருமுகில் தோன்றினாற் போல, நீ தோன்றினையே நிரைத்தார் அண்ணல்-வரிசைப்
படுத்திய மலர் மாலையினையணிந்த பெருந்தகாய் நீ தோன்றினையே, தோன்றிய
பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு-நீ உதித்த பின் உலகில் உள்ள உயிர்களுக்கு,
வானம் பொய்யது மண்வளம் பிழையாது - மழை பெய்தலிற் பொய்யாமையின் நிலவளம்
பிழையாதாயிற்று, ஊனுடை உயிர்கள் உறுபசி அறியா-ஊனுடம்பினையுடைய உயிர்கள்
மிக்க பசியை அறியாவாயின ஆகலின், நீயொழிகாலை நின்னாடு எல்லாம் தாயொழி
குழவிபோலக் கூஉம்-நீ நீங்கிய காலத்துநினது நாடு முழுவதும் தாயற்ற சிறு குழந்தையைப்போல
வாய்விட்ட ழைக்கும்;
செங்கோன் மன்னன் குடிகளுக்குத்
தாய்போல்வான் என்பது
1
" தாயொக்கும் அன்பின்" என்பதனானு மறிக. "தாயொழி குழவி போலக் கூ.உம்''
என்னுங் கருத்து
2
"தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூ.உம்" என்பதனோ டொத்திருத்தலுங் காண்க.
112--9.
துயர்நிலை
உலகம் காத்தல் இன்றி நீ-நீ துன்புறும் நிலையில் உள்ள உலகத்தினைப் பாதுகாத்தலின்றி,
உயர்நிலை உலகம் வேட்டனையாயின்-முத்தியுலக மெய்துதலை விரும்பினையானால்,
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ - அரசே! உயிர்கள் துன்புற்று மரணமடையவும்,
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே - நீ நினக்கு ஊதியமாகிய நிருவாணத்தையே
விரும்பினாயாவையன்றே, தன் உயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஓம்பும் - தனது
உயிர் துன்பத்தால் வருந்துதற்கு இரங்காமல் பிறவுயிர்களைப் பாதுகாக்கும்,
மன்னுயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் - புத்த தேவனது அறமும் இதுவன்று ஆகலான்,
மதிமாறு ஓர்ந்தனை மன்னவ
1
கம்ப. பால. அரசியல். 4.
2
புறம். 4.
|